செவ்வாய், 4 ஜூன், 2013

கலைஞருக்கு பார்பனீயத்தின் வஞ்சப்புகழ்ச்சி

http://idlyvadai.blogspot.com
இன்று 90வது பிறந்த நாள் காணும் கலைஞரை இட்லிவடை வாழ்த்துகிறது. 50+ ஆண்டு அரசியல் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் கொஞ்சமல்ல. ஆனால் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ராமதாஸ் தற்போது அவர் குடும்பம் என்று இன்று வரை போராட்டம் தொடர்கிறது. இரண்டு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் ஒடுக்குமுறைகளை சந்தித்திருக்கிறார். ஆனாலும் இன்று வரை திமுக என்ற இயக்கம் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு இவரே காரணம். "ராமானுஜருக்கு உள்ள வைராக்கியம், தமிழ்நாட்டில் இன்றைக்கு எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருந்தால் இடம்பெயராமல், இதயம் மாறாமல், கொள்கை கோணாமல், அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால், இந்த நாடு என்றைக்கோ இன்னும் அதிகமான முன்னேற்றத்தை பெற்றிருக்கும்" என்று கலைஞர் சொன்னாலும் மத்தியில் காவி ஆட்சியானாலும், காங்கிரஸ் ஆட்சியானாலும் நல்ல உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவரது அரசியல் சாணக்கியத்தை ஜெயலலிதா போன்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.உலகத் தமிழர்களிடையே தமிழின் அடையாளமாக கலைஞரின் பெயரே நிலை பெற்றிருக்கிறது.  செம்மொழி, குமரியில் வள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்டம் என்று எதை சொன்னாலும் கலைஞர் நினைவு வருவது தவிற்க முடியாத ஒன்று. அரசியல்வாதியாக மட்டுமல்ல ஒரு எழுத்தாளராகவும் அவர் தன்னை தொடர்ந்து அடையளப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார். அவருடைய திருக்குறள் உரை திருக்குறளுக்கு எழுதப்பட்ட மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நேற்றுவரை உரைநடை கவிதை எழுதி தன் ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்த தவறியதில்லை. அதே போல் கேள்வி பதில் இலக்கியம். யாரும் கேள்வி கேட்க வில்லை என்றால் தானே கேள்வியும் கேட்டு பதிலும் எழுதிவிடுவார். இவர் இல்லாமல் பத்திரிக்கை உலகமும் ( இட்லிவடையும் தான் ) என்ன செய்திருக்கும் என்று யோசித்துக் கூட பார்க்கமுடியவில்லை.
மிக நெருக்கடியான சந்தர்பங்களிலும் காலகட்டங்களிலும் தனது வாக்கு சாதுரியத்தை வெகு நேர்த்தியாக பயன்படுத்தி வந்ததிருக்கிறார். ஜெயலலிதா அரசினால் அவர் கைது செய்யப்பட்ட காட்சி தமிழர்களை மனம் அதிரச் செய்தது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால் தொடர்ந்து அரசியலை தனது உயிர் மூச்சாக கொண்டதன் அடையாளமே இந்த 50+ ஆண்டு அரசியல் பயணம்.

இந்த 50+ ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவர் தொடர்ந்து இந்து மதத்தையும், இந்துக்களையும் துவேஷித்து வந்துள்ளார்.(உத: ராமர் என்ன எஞ்சினியாரா ? ஹிந்து என்றால் திருடன் ) சகிப்புத்தன்மை பொறுமை ஆகியவற்றை போதிக்கும் இந்திய மக்க்ளின் மதமாகிய இந்து மதம் இதை எல்லாம் தாங்கிக்கொண்டிருக்கிறது. கலைஞரால் இந்து மதம் இது நாள் வரை பெருமையே அடைந்திருக்கிறது.


ராமராஸ், ராமர் குடிகாரன், ராமர்சேது(அ)சேதுராம் என்று தொடந்து ராம நாமத்தை ஜபித்துக்கொண்டிருப்பதால் தான் கலைஞர் இந்த வயதிலும் ஒரு வருட குழந்தை போல் உற்சாகமாக இருக்கிறார். கலைஞரின் பயணம் தொடர்ந்து அதனால் இந்து மதத்தின் பெருமையும் தொடர இட்லிவடையின் வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை: