ஜனநாயக நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு,
தங்களின்
விருப்பத்திற்கு ஏற்ப, "உணவுப் பாதுகாப்பு மசோதா'வை, அவசர சட்டமாக நிறைவேற்ற, காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இதன்மூலம் நினைத்ததை சாதிக்க அக்கட்சி மும்முரமாக களமிறங்கியுள்ளது.வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு, குறைந்த விலையில், உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும், உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற, பல மாதங்களாக, காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனாலும், மற்ற அரசியல் கட்சிகள், போதிய ஒத்துழைப்பு தராததால், மசோதா நிறைவேறுவது தள்ளிப்போனது.
காங்.,
தலைவர் சோனியாவின் கனவுத் திட்டமான, இந்த மசோதாவை நிறைவேற்ற, கடந்த
இரண்டு, பார்லிமென்ட் கூட்டத் தொடர்களின் போதும், மத்திய அரசு கடும்
பிரயத்தனம் எடுத்தது. ஆனால், ஊழல் உட்பட, பல பிரச்னைகளை எழுப்பி,
எதிர்க்கட்சிகள் பார்லிமென்டை முடக்கியதால், மசோதாவை நிறைவேற்ற
முடியவில்லை. தமிழகத்தை ஆளும், அ.தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான,
தி.மு.க.,வும், இந்த மசோதாவை எதிர்க்கின்றன. அதேநேரத்தில், மத்திய அரசை
வெளியிலிருந்து ஆதரிக்கும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும்,
"விவசாயிகளுக்கு எதிரான மசோதா இது' எனக்கூறி, ஆதரவு தர மறுக்கிறது. அதேபோல,
வேறு சில கட்சிகளும், இம்மசோதாவை எதிர்க்கின்றன.பிரதான எதிர்க்கட்சியான,
பா.ஜ.,வோ, "சில திருத்தங்களை செய்து, மசோதாவை நிறைவேற்றலாம்' எனக்கூறி
வருகிறது.விருப்பத்திற்கு ஏற்ப, "உணவுப் பாதுகாப்பு மசோதா'வை, அவசர சட்டமாக நிறைவேற்ற, காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இதன்மூலம் நினைத்ததை சாதிக்க அக்கட்சி மும்முரமாக களமிறங்கியுள்ளது.வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு, குறைந்த விலையில், உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும், உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற, பல மாதங்களாக, காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனாலும், மற்ற அரசியல் கட்சிகள், போதிய ஒத்துழைப்பு தராததால், மசோதா நிறைவேறுவது தள்ளிப்போனது.
பிடிவாதத்தை கைவிடாத காங்.,:
இதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் கூறியதாவது:உணவு பாதுகாப்பு மசோதா பற்றி விவாதிக்க, சமீபத்தில், ஐ.மு.கூட்டணி தலைவர்களின் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், "உணவு பாதுகாப்பு மசோதாவை, அவசர சட்டமாக நிறைவேற்றக் கூடாது. போதுமான விவாதம் நடத்தி, பார்லிமென்டில்தான் நிறைவேற்ற வேண்டும். இதுவே என் கருத்து. அதற்கு மேல், நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள்' என, கூறி விட்டார்.சரத்பவார் பெரிய அளவில் எதிர்ப்பை தெரிவிக்காதது, காங்கிரசுக்கு தெம்பைக் கொடுத்துள்ளது. அதனால், மசோதாவை அவசர சட்டம் மூலம் நிறைவேற்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அமைச்சகம் ஒப்புதல்:
மத்திய அமைச்சரவை கூட்டம்:
- நமது டில்லி நிருபர் -dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக