உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான மர்லின்
மன்ரோவைப் பிடிக்காத ஆண்களே இருக்க முடியாது. ஆனால் அவருக்கோ பெண்களை
மட்டுமே பிடிக்குமாம். தன்னைப் போல அழகு படைத் பல பெண்களுடன் அவர்
லெஸ்பியன் உறவு கொண்டிருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
50
ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார் மர்லின் மன்ரோ. அதைக் கேட்டு உலகம்
முழுவதும் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரைப் பற்றிய
செய்திகள்தான் அன்று முழுவதும்.உலகம் முழுவதும் மர்லின் மன்ரோவுக்கு கோடானு கோடி ரசிகர்கள் இருந்தனர்கள். இவர்களில் ஆண்கள்தான் அதிகம். ஆனால் மன்ரோவுக்கு ஆண்களை விட பெண்களையே அதிகம் பிடித்ததாம். பெண்களுடன்தான் அவர் நெருக்கமான நட்பையும் வைத்திருந்தாராம். இன்னும் ஒரு படி மேலே போய் சில பெண்களுடன் அவர் லெஸ்பியன் உறவும் கொண்டிருந்தாராம்.
மூன்று முறை திருமணமாகி, மூன்று முறை விவகாரத்து செய்தவர் மர்லின் மன்ரோ. இதற்கு அவரது லெஸ்பியன் பழக்கம்தான் முக்கியக் காரணம் என்கிறார்கள். அவருக்கு ஆண்களுடனான இயற்கையான செக்ஸ் உறவு பிடிக்கவில்லையாம். மாறாக, பெண்களுடன் செக்ஸ் இன்பம் காணவே அவர் பெரிதும் விரும்பினாராம். இதனால்தான் திருமண வாழக்கையில் அவரால் நிலைக்க முடியவில்லை என்கிறார்கள்.
அக்காலத்தில் பிரபலமான ஜோன் கிராபோர்ட், பார்பரா ஸ்டான்விக், மெர்லின் டயட்ரிச், எலிசபெத் டெய்லர் ஆகியோருடன் மன்ரோ லெஸ்பியன் உறவு வைத்திருந்ததாக அவரே ஒரு கட்டத்தில் கூறியுள்ளார். இவர்கள் போக நதாஷா லிடஸ், பாலா ஸ்டிராஸ்பெர்க் ஆகியோருடனும் அவருக்கு லெஸ்பியன் உறவு இருந்ததாம்.
இதுதொடர்பான தகவல்களை மிஷல் மார்கன் விரைவில் வெளியிடவுள்ள Marilyn Monroe: Private And Undisclosed என்ற நூலில் தெரிவித்துள்ளார்.
இந்த நூலில், மர்லின் மன்ரோ மீது மோகம் கொண்டு திரிந்தோர் எண்ணிக்கை எண்ணி மாள முடியாதது. ஆனால் அவருக்கோ ஆண்கள் மீது துளியும் ஈடுபாடு வரவில்லை. அவருக்கு ஆண்களுடன் உறவு கொள்வதில் பிடித்தமும் இல்லை, அதை அவரால் சரியாக செய்யவும் முடியவில்லை. மாறாக, அவர் உறவு வைத்திருந்த பெண்களிடம் பெரும் இன்பத்தை துகித்ததாக அவரே கூறியுள்ளார் என்று கூறியுள்ளார் மிஷல்.
புத்தகத்தில் இன்னும் என்னவெல்லாம் இருக்கப் போகிறதோ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக