செவ்வாய், 24 ஜூலை, 2012

13 வயது மாணவனுடன் 9 வருட உறவு... இந்திய டீச்சருக்கு சிறை!



 Indian American Teacher Heads Jail Relationship Minor
நியூயார்க்கில் உள்ள மான்டிசோரி பள்ளியின் முன்னாள் முதல்வரான 46 வயது இந்திய அமெரிக்க ஆசிரியை, 13 வயது மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
அந்த ஆசிரியையின் பெயர் லீனா சின்ஹா. இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இவரது பெற்றோர் தொடங்கி நடத்தி வந்த பள்ளியில் இவர் அப்போது முதல்வராக இருந்து வந்தார். அப்போது 1996ம் ஆண்டு இவர் 13 வயது பையனுடன் முதலில் வாய் வழி உறவை வைத்திருந்தார். பின்னர் அந்தப் பையனை தொடர்ந்து பாலியல் ரீதியாக பயன்படுத்தி வந்தார். அந்தப் பையன் நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி என்று போகும் வரை விடாமல் தொடர்ந்து அவனைப் பயன்படுத்தினார்.
அந்தப் பையன் வளர்ந்து வாலிபனான பின்னர் இதுகுறித்து வெளியில் சொன்னதால் லீனா சிக்கிக் கொண்டார். அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 2007ம் ஆண்டு லீனா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு 4 முதல் 14 ஆண்டுகள் வரையிலான சிறைவாசம் விதிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அப்பீல் மனுக்களை இவர் தாக்கல் செய்து வந்ததால் சிறைவாசத்தைத் தவிர்த்து வந்தார்.
அவரது வக்கீல் கோர்ட்டில் வாதிடுகையில் அவர்களுக்குள் இருந்தது காதல்தான். அந்தப் பையன் கோர்ட்டில் சாட்சியமளிக்கையில், இந்த உறவை தான் விரும்பியதாகவும், அனுபவித்ததாகவும், அது தனக்கு மகிழ்ச்சி கொடுத்ததாகவும் கூறியுள்ளான். இதை கோர்ட் கவனிக்க வேண்டும் என்றார்.
ஆனால் லீனாவின் கடைசி அப்பீலை கோர்ட் தற்போது நிராகரித்து விட்டது. ஒரு சிறுவனின் வாழ்க்கையை ஹைஜாக் செய்து விட்டார் லீனா. அவனது பால்ய வயதை களங்கப்படுத்தி விட்டார். சிறுவனின் அறியாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவனை சீரழித்து விட்டார் என்று கூறி சிறைத் தண்டனையை உறுதி செய்தது கோர்ட்.
இதையடுத்து தற்போது லீனாவை சிறையில் அடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்ட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: