கார்த்தி, அனுஷ்கா ஆகியோர் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பிற்காக மைசூர் சென்றுள்ளனர். மைசூரில் ஹீரோ, ஹீரோயினை வில்லன் சேஸ் செய்யும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த சண்டைக் காட்சியில் தான் அனுஷ்காவும், கார்த்தியும் ரயிலிலிருந்து குதித்ததாக கூறப்பட்டது.
இந்த சண்டைக் காட்சி பற்றி பேசிய இயக்குனர் சுராஜ் “ ஹெலிகாப்டரில் துரத்தும் வில்லனிடமிருந்து தப்பிக்க ஹீரோ, ஹீரோயின் ரயிலின் மேல் ஓடுவது போன்ற காட்சி மைசூரில் படமாக்கப்பட்டது. குறிப்பிட்ட தூரம் வரை ரயில் மீது ஓடிய பின்னர் இருவரும் அங்கிருந்து கீழே குதிப்பது போன்ற காட்சியை திட்டமிட்டு, டூப் நடிகர் நடிகையை வரவழைத்திருந்தோம்.
ஆனால் அவர்களுக்கு இடம் கொடுக்காமல் அனுஷ்காவே ரயிலின் மேலே இருந்து கீழே குதிப்பதாகக் கூறினார். அனுஷ்காவின் தைரியத்தை பார்த்து படக்குழுவே ஆச்சர்யப்பட்டது. அனுஷ்கா ரயிலிலிருந்து குதிக்கும் போது ரயில் வண்டியின் வேகத்தை குறைக்கும்படி கூறிவிட்டு அந்த காட்சியை படமாக்கினோம்” என்று கூறினார்.
அருந்ததி, பில்லா ஆகிய படங்களில் பல ஆக்ஷன் காட்சிகளில் நடித்த அனுஷ்கா, தனது கவர்ச்சியான நடிப்பைப் போல் ஆக்ஷன் பிளாக் நடிப்பையும் அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக