சனி, 16 ஜூன், 2012

சிரஞ்சீவியால் காங்கிரசுக்கு எந்த லாபமும் இல்லை


 Andhra Pradesh Jagan Mohan Reddy Routs Chiru Base

ஹைதராபாத்: ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு...என்ற வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆந்திர அரசியலில் நடிகரும் எம்.பி.யுமான சிரஞ்சீவிக்குத்தான் பொருந்தும்...
பிரஜா ராஜ்ஜியம் கட்சியை பிரம்மாண்டமாக தொடங்கி அதிரடியாக சட்டப்பேரவைத் தேர்தலில் 18 தொகுதிகளைப் பெற்று கதிகலங்க வைத்தார் சிரஞ்சீவி. இந்த அமர்க்களத்தைக் கண்டு ஆடிப்போன காங்கிரஸ் கட்சி, சிரஞ்சீவிக்கு எம்.பி. பதவி, அமைச்சர் பதவி என்றெல்லாம் வலைவீசி தங்களது கட்சியில் ஐக்கியப்படுத்திக் கொண்டது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெகன் மோகன் ரெட்டி கூண்டோடு வெளியேறிப் போனதால் உருவாகும் வெற்றிடத்தை சிரஞ்சீவி நிரப்புவார் என்று கணக்குப் போட்டது காங்கிரஸ்.
ஆனால் அண்மையில் நடந்து முடிந்த மினி பொதுத்தேர்தலில் சிரஞ்சீவியின் செல்வாக்கை ஜெகன் சூறாவளி சூறையாடிப் போய்விட்டது.

திருப்பதி தொகுதியில் சிரஞ்சிவி போட்டியிட்டு 56,305 வாக்குகள் பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் 40,379 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். தற்போதைய இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு 96 ஆயிரத்து 684 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது காங்கிரசுக்கு 41 ஆயிரத்து 220 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இப்படி தொகுதிக்கு தொகுதி கால்குலேஷன் போட்டு கதிகலங்கிப் போய் கிடக்கிறது காங்கிரஸ்.
ஜெகன் மீது கை வைக்காமல் இருந்திருந்தாலாவது கொஞ்சம் கவுரவமாகத் தோற்றிருக்கலாமோ என்கிறது காங்கிரஸ் வட்டாரங்கள்

கருத்துகள் இல்லை: