வியாழன், 14 ஜூன், 2012

காமராஜ் திரைப்படம் ரியல் Hero வின் கதை


திரையில் தோன்றும் ரியல் ஹீரோ! 

 பஞ்ச் டையலாக் பேசி, பறந்து பறந்து சண்டைபோடும் எத்தனையோ ரீல் ஹீரோக்களை தமிழ் சினிமா சந்தித்திருக்கிறது. அவர்கள் எல்லோரும் திரையில் மட்டுமே ஹீரோக்களாக இருப்பவர்கள். ஆனால் விரைவில் ஒரு ரியல் ஹீரோ தமிழ்திரையில் புதுப்பொலிவுடன் தோன்ற இருக்கிறார்.
 வின் கதை 
ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு “காமராஜ்” என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மக்களின் ஆதரவைப் பெற்ற அத்திரைப்படம், பத்திரிகைகள், ஊடகங்கள், சினிமா விமர்சனங்களின் ஏகோபித்த பாராட்டினையும், தமிழக அரசின் அந்த ஆண்டிற்கான சிறப்பு விருதினையும் பெற்றது.
இப்போது அத்திரைப்படம், நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, பல புதிய காட்சிகளோடு மீண்டும் திரைக்கு வர இருக்கிறது.
காமராஜர் பாரத விடுதலைக்காக காந்தியின் வழி நின்று ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் செய்தவர். மூன்று முறை தமிழக முதல்வராக இருந்து பொற்கால ஆட்சியை தந்தவர். இரண்டு முறை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்து சர்வதேச புகழ் பெற்றவர்.
தமிழகத்தில் அனைத்து தரப்பிரரும் கல்வி கற்கும் வகையில் இலவசக் கல்வியையும், ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணாவும் வழங்கி அறிவு புரட்சிக்கு வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர் ஆவார். நெய்வேலி அனல் மின் நிலையம், திருச்சி பாரத் மிகு மின் நிலையம் உள்ளிட்ட பல திட்டங்களை தமிழகத்திற்கு கிடைக்க செய்தவர்.  
காந்தியவாதியான இவர் இறுதிக்காலம் வரை வாடகை வீட்டில் வாழ்ந்தவர். அவர் மறைந்த போது அவரிடமிருந்த சொத்து ரூ.110 தான். தற்போது தேசமெங்கும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் துவங்கியுள்ளன. இன்றைய அரசியல்வாதிகளின் அதிகார மோகம், நேர்மையற்ற செயல்பாடுகள் நம் இளைஞர்களிடையே மாற்று அரசியல் குறிந்த சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜரின் நேர்மை, எளிமை, செயல்பாடுகள் குறித்து இன்றைய இளைஞர்கள் அறியும் போது அது அவர்களுக்கு சிறந்த அரசியல் வழிகாட்டியாக அமையும். தேசத்தை வழிநடத்த உதவும். இதற்கென தற்போது புதிதாக 15 காட்சிகள் கணினி வரைகலை துணையுடன் படமாக்கப்பட்டு வருகிறது.
காமராஜரின் ரஷ்யப்பயணம் இணைக்கப்பட்டுள்ளது. நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் ஞிஜிஷி ஒலி அமைப்பு, புதிய பரிமாணத்துடன் இசைஞானி இளையராஜாவின் ஆத்மார்த்தமான இசை என பிரமாண்டமாக உருவாகி வருகிறது “காமராஜ்” திரைப்படம்.
அ.பாலகிருஷ்ணன் தயாரித்து, இயக்கும் இத்திரைப்படம், காமராஜரின் 110வது பிறந்த தினமான ஜுலை 15ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை: