செவ்வாய், 12 ஜூன், 2012

அழகிரியின் தளபதி வாக்கிங் போனபோது கைது. 6 பிரிவுகளில் வழக்கு


 Madurai Dmk Secretary Dhalapathi Arrested
 மதுரை மாவட்ட திமுக செயலாளரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவருமான கோ.தளபதி திடீரென இன்று காலை கைது செய்யப்பட்டார். வாக்கிங் போனபோது அவர் கைதானார். அவர் மீது நில அபகரிப்பு உள்பட 6 வழக்குகள் பாய்ந்துள்ளன.
மதுரை தியாகராஜர் காலணியில் உள்ள முருகேசன் என்பவர் போலீஸாரை அணுகி ஒரு புகார் கொடுத்தார். அதில்,தளபதியின் தூண்டுதலின் பேரில் அவரது உதவியாளர் வெங்கடேசன் தலைமையில் 5 பேர் கொலை மிரட்டல் விடுத்தனர். என்னையும் என் மனைவி சுமதி மற்றும் மகள், மகனை அத்துமீறி வீட்டுக்குள் வந்து மிரட்டல் விடுத்தனர் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து இன்று காலை வாக்கிங் போய்க் கொண்டிருந்த தளபதியை போலீஸார் ரவுண்டப் செய்து மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்திற்குக் கூட்டிச் சென்று விசாரணையை தொடங்கினர். பின்னர் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவானது. அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
தளபதி மீது கலகம் விளைவித்தல், நம்பிக்கை மோசடி, நிலஅபகரிப்பு, கொலை மிரட்டல்,கூட்டம் கூட்டுதல் என வழக்குகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவரை போலீஸார் ஆஜர்படுத்தினர்.

கருத்துகள் இல்லை: