வெள்ளி, 15 ஜூன், 2012

ஜெயா ஒரு ரவுடி என்பதை மறக்கலாமா?மறந்துவிடாதீர்கள்

ஜெயலலிதா பற்றி கருணாநிதியின் ‘தில்’லான வார்த்தை விளையாட்டு!

Viruvirupu
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, முதல்வர் ஜெயலலிதாவை கிண்டல் அடிப்பதற்கு கற்றுக் கொடுக்கவா வேண்டும்? அதுவும், பெயர் குறிப்பிடாமல் வார்த்தை விடுவதில் கில்லாடி அவர். தமது 89-வது பிறந்தநாள் விழாவில் நேற்று (புதன்கிழமை) அவர் அடித்த காமென்ட் ஒன்று, கார்டனில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
எமக்கு பரிச்சயமான அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், “இப்படித்தான் துரைமுருகன் சில மாதங்களுக்கு முன் ஒருதடவை வார்த்தை விளையாட்டு காட்டப்போய், அம்மாவின் கோபத்துக்கு ஆளானார். அப்போது அவருக்கு என்ன சிக்கல்கள் வந்தன என்பதை அவரிடம் கேட்டுப் பாருங்கள். இப்போது இவர் (கருணாநிதி), ஆரம்பித்திருக்கிறார்” என்றார்.
சொல்வது புரிகிறதா உடன்பிறப்பே..
பிறந்தநாள் விழாவில் அப்படி என்னதான் வார்த்தை விளையாட்டு விளையாடினார் கருணாநிதி?
“தி.மு.க. மீது, தேவையில்லாமல் சீண்டிப் பார்க்கிறார்கள். எம்மவர்கள்மீது கண்டபடி கேஸ்கள் போடுகிறார்கள். அது பழிவாங்கல் நடவடிக்கை இல்லாமல் வேறென்ன? ஒருவர் குண்டாக இருந்தால் போதும், அவர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது” என்று தொடங்கியவர் அடுத்து கூறிய வாக்கியத்தைக் கவனியுங்கள்:
“நாளைக்கே எங்களுக்கும் காலம் வரும். குண்டாக இருப்பவர் மீது, குண்டர் சட்டம் பாய்வதென்றால், எதிர்காலத்தில் யார் மீதெல்லாம் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
நான் யாரையும் கேலி செய்யவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்”
இதற்கு பொழிப்புரை தேவையா?
அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை அவர். “நான் பகுத்தறிவுவாதி. எனக்கு அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கை இல்லை. தமிழகத்தை ஆளுகிறவர் ஆன்மீகவாதி. அவருக்கு அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கை உண்டு. இன்று செய்யும் பழிவாங்கல்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அவர்களுக்கு கூலி கிடைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்றும் ஒரே போடாகப் போட்டிருக்கிறார்.
அடுத்த ஜென்மத்தை விடுங்கள். இந்தப் பேச்சு இந்த ஜென்மத்திலேயே சிக்கலை ஏற்படுத்தும்” என்கிறார் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர். அடுத்த சில தினங்களில் ரெயிடு ஏதாவது இருக்குமோ! 

கருத்துகள் இல்லை: