நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டுவது காவல்துறையினரது மாத்திரமன்றி ராணுவத்தினரதும் கடமை என ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவசர கால சட்டம் நீக்கப்பட்டு;ள்ள நிலையில், நெருக்கடியான தருணங்களில் காவல்துறையினரின் கோரிக்கைக்கு அமைய குறித்த நடவடிக்கைகளில் ராணுவத்தினர் தலையிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலை மெக்ஹெய்சர் மைதானத்தில் இடம்பெற்ற ராணுவ பயிற்சிகளின் போது செய்தியாளர் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
கடந்த 24 ம் திகதி ஆரம்பமான குறித்த பயிற்சி நடவடிக்கைகள், எந்தவொரு அவசர தருணத்திலும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஏற்றவகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நாளை மறுதினம் வரை இடம்பெறும் குறித்த பயிற்சி நடவடிக்கைகளில் முப்படையைச் சார்ந்த சுமார் 4 ஆயிரம் பேர் இணைந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக