்
(அ. விஜயன், தமிழ் நாடு அகதி முகாம்)
பணம் இல்லாவிட்டாலும் படைபலன் என்பது ஒரு தைரியத்தை கொடுக்கும் என்பார்கள் பணமும் இல்லாமல் படைபலன்களும் இல்லாமல் ஓண்டாண்டியாகிப் போய் செய்வதறியாது திகைத்து நிற்கும் மாற்று இயக்கங்களில் இருந்தவர்கள் புனர்வாழ்வு தொடர்பாக அவர்களில் அக்கறை உள்ளவர்கள் அவர்களுக்காக ஏதாவது செய்ய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
் புலிகள் இயக்கத்தில் இருந்து தற்போது புனர்வாழ்வு முகாம்களில் இருப்பவர்களின் நிலை உள்ளது. இலங்கை அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள் என்பன அனைத்தும் அவர்களது வாழ்கை தொடர்பாகவே சிந்திக்கிறார்கள் அவர்களது சிந்தனையில் நியாயம் இருக்கின்ற போதும் மற்றய இயக்கத்தைச் சோந்தவர்கள் தொடர்பாகவும் யோசிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கைக்காக தங்களது வாழ்க்கையை தியாகம் செய்தவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட வேணடியவர்களே அவர்களது நலன்களும் பேணப்படுவது அவசியாமாகும்.
மாற்று இயக்க்தில் இருந்தவர்களுக்காக குரல் கொடுப்பதற்கோ அவர்களுக்காக பேசுவதற்கோ எண்ணிக்கையில் குறைவானவர்களே உள்ளனர். ஊடகங்களும் இவ்வகையான செய்திகளை ஊரறிய, உலகறிய செய்வதில்லை
பெரிய சொத்து பத்துகளை வைத்திருந்து பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போது அதன் பலாபலன்களை அனுபவிப்பவர்கள் யாரும் இயக்கங்களில் சேரவில்லை.
'தமிழர்களுக்கு ஒரு நாடு கிடைக்கும். கிடைக்கும் அந் நாடானாது சோசலிச சமதர்ம நாடக இருக்கும். அங்கு இல்லாதவன் இல்லை என்ற நிலை இருக்கும் என்றுதான் அவர்களும் நினைத்தார்கள். அவர்களை உசுப்பேற்றியவர்களும் அப்படித்தான் சொன்னார்கள்'. உசுப்பேறி உச்சிக்குப் போய் விழுந்து கிடப்பவர்கள் தொடர்பாக அவர்களது புனர்வாழ்வு தொடர்பாக யோசிக்கத் தொடங்க வேண்டும். அதற்காக ஒரு அமைப்பை கூட தொடங்கி அதற்காக போராட வேண்டும் (ஈழப் போராட்டம் போதும் இனி உனக்காக போராடு)
இன்று கிழக்கு மாகாணத்தில் ஆட்சியில் இருப்பது ஒரு இயக்கத்தில் இருந்த முதலமைச்சர் அவருக்கு அதன் வலி தெரியும், வடக்கில் ஆட்சி அதிகாரத்துக்கு துணையாக இருப்பவரும் அமைச்சருமானவர் ஒரு இயக்கத்தில் இருந்தவர் அவருக்கும் அதன்வலி புரியும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்க்ள இயக்கத்தில் இருந்தவர்கள் அவர்களுக்கும் புரியும். இந்த இடத்தில் அந்த நான்கு பேருக்கும் புணர்வுவாழ்வு முகாம்களில் இருக்கும் நபர்களுக்காக குரல் கொடுப்பதற்கு நன்றி. அதே நேரம் அவர்களுடன் முகாம்களில் ஒன்றாய் இருந்த, ஒன்றாய் பயிற்சி பெற்ற ஒன்றாய் உண்டு, உறங்கிய தோழர்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருப்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
பிறந்த ஊரையும், உடன் பிறப்புக்களையும், சொந்தங்களையும் அவர்கள் விட்டுப்பிரிந்து நமக்குள்ளே நாம் பயந்து, இவ்வளவு காலத்திற்குப் பின்ரும் ஊரில் வெறும் ஆளாக அடுத்தவனிடம் கையேந்தி, அடுத்தவன் வளவில் ஒரு குடில்கட்டி வாழ்வதா வாழ்கை என நிர்க்கதியாய் நிற்கும் ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைவரும் உணர்ந்து அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த தங்களால் ஆன காரியங்களை செய்யத் தொடங்க வேண்டும்.
'ஓகோ' என்று வாழாவிட்டாலும் நாடு புடிக்கப் போய் நடுத்தெருவில், அவன் வாழ்வதை தவிர்க்க அவர்களுக்கான, புனர்வாழ்வு திட்டமும் நிச்சயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்.
(அ. விஜயன், புரட்டாதி 10, 2010)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக