தேசிய பத்திகைகளின் பிரதம ஆசிரியர்கள், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரை அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் உரையாடினார். இவ்வுரையாடலின்போது 18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விளக்கமளிக் கப்பட்டதுடன், பத்திகை ஆசிரியர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
அமைச்சர்களான ஜி.எல்.பீஸ், கெஹலி ய ரம்புக்வெல, டலஸ் அழகப்பெரும, மைத்திபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். இங்கு பத்திகை ஆசிரியர் ஒருவர், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பல்வேறு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படுகின்றனவே. எனவே, அதனை கைவிடும் எண் ணம் எதுவும் உண்டா? என்று வினவினார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி இதனை கைவிடும் நோக்கமில்லை. எதற்காக அவ்வாறு கைவிட வேண்டும். மக்கள் எமக்கு பூரண ஆதரவு வழங்கியுள்ளனர் என்றார். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனவே என்று கேட்டபோது, அதற்கு பதில ளித்த ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் என்றால் எதிர்க்கத்தான் செய்யும். இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி. யிலி ருந்து 45 பேர் அரசியலமைப்பு மாற்றத்திற்கு ஏலவே ஆதரவு தெரிவித்திருந்தனர். ஏன், எதிர்க் கட்சித் தலைவர்கூட இதற்கு ஆதரவு வழங்கலாம் என்றார்.
புத்திஜீவிகள் மத்தியில் இதற்கு எதிர்ப்புள்ளதாக தெரிகின்றது என சுட்டிக்காட்டிய போது, அவ்வாறு எதிர்த்திருப்பதாக தனக்கு தெரியவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.
இதேவேளை, அரசியலமைப்பு திருத்தம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளதே? அதற்கு காரணம் என்ன என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த ஜனாதி பதி, 17 ஆவது திருத்தம் அவ்வாறே கொண்டுவரப்பட்டது. எனினும், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நாம் அவ்வாறு கொண்டுவரவில்லை. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இது குறித்து தெளிவுபடுத்தி வந்துள்ளனவே, மஹிந்த சிந்தனையின் 53 ஆவது பக்கத்திலும் இது குறித்து கூறப்பட்டுள்ளது என்றார்.
18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு அதிகூடிய அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர் தனது ஆட்சிக்கால எல்லையை அதிகரித்ச் செல்லலாம் என நீங்கள் கருதவில்லையா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், மக்களுக்கு தேவையில்லையென்றால் ஜனாதிபதியை அவர்கள் தூக்கி எறிந்து விடுவார்கள். மக்களுக்கு பொறுப்புக்கூறும் வகையிலான ஜனாதிபதியை அவர்களே தெரிவு செய்ய வேண்டும். மக்களோ நாடோ தேவையில்லை என எண்ணி ஜனாதிபதி தனது மனம்போல தான் தோன்றித்தனமாக செயற்படுவாரேயானால் அவர் தேவையில்லையென மக்கள் தீர்மானிப்பார்கள். எனவே, அனைத்தும் மக்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக