சாந்தி என்ற பெயரில் தயாராகி வரும் படத்தின் சூடான படுக்கை அறைக் காட்சிகள் யூடியூபில் வெளியாகி உலா வந்து கொண்டிருக்கின்றன.
ஏ ஒன் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம்தான் சாந்தி. இதில் அர்ச்சனா நாயகியாக நடிக்கிறார். இவர் மும்பை வரவு. அவருக்கு ஜோடியாக மகா ஆதித்யா என்பவர் நடிக்கிறார். முரளி விஷ்வா இப்படத்தை இயக்குகிறார்.
படம் இன்னும் முடியவில்லை, படப்பிடிப்பில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஹீரோ, ஹீரோயின் உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுப்பது போன்ற காட்சியைப் படமாக்க திட்டமிட்டார் இயக்குநர் . இதுகுறித்து அர்ச்சனாவிடம் கூறியபோது அவர் நடிக்க மறுத்து விட்டார். இதனால் படப்பிடிப்பு நின்று போனது. பின்னர் அவரை சமாதானப்படுத்தி அந்தக் காட்சியில் நடிக்க வைத்தனராம்.
இது பழைய கதை. விஷயம் என்னவென்றால் அந்த உதட்டு முத்தக் காட்சியை விட படு சூடான படுக்கை அறைக் காட்சியை யூடியூபில் வெளியிட்டுள்ளனர் அந்தப் படக்குழுவைச் சேர்ந்த சிலரே.
படு சூடாக இருக்கிறது அந்தக் காட்சி. மிகவும் நெருக்கமான முறையில் ஹீரோவுடன் கட்டிப் புரண்டு உருண்டிருக்கிறார் அர்ச்சனா. முத்தம், காம யுத்தம் என அந்தக் காட்சி படு விறுவிறுப்பாக இருக்கிறது.
படப்பிடிப்பே முடியாத நிலையில், எடிட் செய்யப்படாத அந்தக் காட்சி எப்படி வெளியானது என்று தெரியவில்லை. படக் குழுவில் உள்ள யாரோதான் இதை வெளியிட்டு விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. யூடியூபில் இந்தக் காட்சிதான் இப்போது சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
பதிவு செய்தது: 07 Sep 2010 2:52 am
இவர்களுக்கு படுக்கை அறையை காட்டினால் தான் கதை சொல்ல முடியுமாம், என்ன கதையாக இருக்கிறது. ஒரு உறவுக்குள் இருக்கும் நெருக்கத்தை படுக்கை அரை மட்டும் தான் உணர்த்துகிறத? காதலை கேவலப்படுத்துகிறார்கள் இந்த சினிமாக்காரர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக