.‘சூர்ய நகரம்’ படத்தில் நடித்து வருகிறார் மீரா நந்தன். அவரது நடிப்பு, ஒழுக்கத்தை கண்ட டைரக்டர் செல்லமுத்து சொக்கிப்போனார். ஷூட்டிங் முடிந்துவிட்டு வீட்டுக்குசென்ற மீராவை போனில் தொடர்பு கொண்டு ‘உங்க குணம் பிடிச்சிருக்கு. உங்களை காதலிக்கிறேன். என் காதலை ஏற்றுக்கொள்ளுங்க’ என்று சினிமா பாணி ஹீரோ போல் வசனம் பேசினார். ஆனால் மீராவோ, ‘இந்த காதலில் விருப்பமில்லை’ என்று மறுத்துவிட்டார். விஷயம் யூனிட்டில் பரவியது.
இயக்குனரை கண்டதும் யூனிட்டில் கிசுகிசு தொடங்கி விடுகிறதாம். இதைப்பார்த்த இயக்குனர், ‘மீரா நந்தனிடம் எனது காதலை சொன்னது உண்மை. அவர் மறுத்தவுடன் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். ஆனாலும் இதுபற்றி மீரா ஷூட்டிங் நேரத்தில் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது’ என்றார். ஆனால் மீரா நந்தனோ, ‘இயக்குனர் என்னிடம் காதல் சொன்னதுபற்றி என் அம்மாவிடம் மட்டும்தான் கூறினேன். யூனிட்டில் யாரிடமும் கூறவில்லை’ என்கிறார். இதனால் இந்த படப்பிடிப்பு எப்போதும் பரபரப்புடனே நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக