செவ்வாய், 7 செப்டம்பர், 2010

இலங்கை அகதிப்பெண் வீட்டில் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை



கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை பண்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேஷ் (28). இவரது மனைவி வாணி(23).
 திருமணத்திற்கு பிறகு கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதி முகாமைச் சேர்ந்த நந்தினிக்கும் (27) ராஜேசுக்கும் காதல் ஏற்பட்டது.
இதனையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக எளாவூரில் தனியே வாடகை வீட்டில் இலங்கை அகதிபெண் நந்தினியுடன் வாலிபர் ராஜேஷ் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை எளாவூரில் உள்ள இலங்கை அகதி பெண் நந்தினி வீட்டில் வாலிபர் ராஜேஷ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆரம்பாக்கம் போலீசார் வாலிபர் ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ராஜேசின் தம்பி பன்னீர்செல்வம் ஆரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில், தனது அண்ணன் ராஜேஷ் இலங்கை அகதி பெண் நந்தினியுடன் 4 வருடங்களாக தனியே குடும்பம் நடத்திவந்தார்.

தற்போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதை நம்பமுடியவில்லை இலங்கை அகதி பெண் நந்தினி மற்றும் அவரது தம்பி மதி ஆகியோர் ராஜேசை கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். இதுபற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேணுகோபால் வழக்கு பதிவு செய்து ராஜேசின் காதலியான இலங்கை அகதிபெண் நந்தினியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை: