தே.மு.தி.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வடசென்னை, தண்டையார்பேட்டையில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்று நோன்பு திறந்து வைத்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:இஸ்லாம் என்பது மதம் கிடையாது; மார்க்கம். அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதைத்தான் குர்-ஆன் கூறுகிறது.எனக்கு அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கை உள்ளது. எனது வீட்டிலும், அலுவலக அறையிலும் அனைத்து மத கடவுள் படங்களும் உள்ளன. கிடங்குகளில் வீணாகும் உணவுப்பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், நாட்டில் ஏழைகள் அதிகம் உள்ளநிலையில், அவற்றை பங்கிட்டு கொடுக்க முடியாது.மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட் தலையிடக் கூடாது என்கின்றனர். ஏழைகளை வாழவைக்கும் அரசு என்றால், வீணாகும் பொருட்களை கொடுக்கவேண்டியதுதானே. அங்கு அப்படி என்றால் இங்கு தி.மு.க., அரசு பொதுமக்களுக்கு குல்லா போட்டு ஏமாற்றுகிறது.
சிறுபான்மை சமூக மக்களின் நண்பர் என்று கூறுபவர்கள், அவர்களின் முன்னேற்றத்திற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான் இதை தட்டிக்கேட்டால் கோபம் வருகிறது. விஜயகாந்தால் மட்டும் இதையெல்லாம் செய்ய முடியுமா என்று கேட்கின்றனர்.இப்படி தொடர்ந்து பேசினால் என் சொத்தை பறிப்பார்கள்; வெட்டுவார்கள். இதற்கெல்லாம் நான் என்றைக்கும் அஞ்சமாட்டேன். என்னை வாழ வைத்த மக்களுக்காக என்னவேண்டுமானாலும் செய்வேன்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.இந்நிகழ்ச்சியில் தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரபு தமிழன் - Manama,பஹ்ரைன்
2010-09-08 04:15:57 IST
கேப்டன் அண்ணாச்சி, நீங்களும் படத்தில குல்லா போட்டுட்டுதானே நம்முடைய இஸ்லாம் மக்களுடைய ஒட்டுக்கள பெறுவதற்கு இந்த ஆக்ட் குடுக்கிறீங்க. என்னா போசு..... சூப்பர்...... சினிமாவுல கூட இப்படி போசு குடுக்க மாட்டீங்க. எத்தனை டேக் எடுத்தாலும் இப்படி வராதுண்ணா. கன்னிதாயிக்கும் இப்படி திடீர்னு இஸ்லாமியர்கள் மேல திடீர் சாம்பார், திடீர் ரசம் மாதிரி திடீர் பாசம் வரும். அதுவும் தேர்தல் நேரத்தில மட்டும் தான் . ரம்சான் காலத்துல ஒரு பச்சை புடவைய மேல சுத்திக்கிட்டு வந்து குந்திகிட்டு காஞ்சி குடிக்கிற மாதிரி போசு குடுக்கும். உடனே நம்ம இஸ்லாமிய சகோதரர்களும் ஏதோ பாத்திமா பீவி கூட கஞ்சி குடிக்கிறது மாதிரி கனவு கண்டுட்டு கலைஞ்சி போடுவானுக. எப்படி அய்யா உங்களுக்கு மட்டும் மேக்-அப் போடாமலே இந்த கலை எல்லாம் வருது. பாண்டியன், வைகோ ராமதாஸ், எல்ல்லோருக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்களேன்....
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-09-08 03:38:40 IST
அட இது நல்லா இருக்கே பெருசு குல்லா போட்டு மக்களை ஏமாத்துதா... அப்டினா உன்ன எப்டி சொல்றது நீ குல்லா போடாமலே எங்கள ஏமாத்துறியே, நீ எதையும் தட்டியும் கேட்க வேணாம் அடிச்சியும் கேட்க வேணாம். இப்டியே பேசிட்டு இருந்தேன்னு வச்சிக்கோ ஒரு பயலும் உன்ன ஆட்டத்துல சேத்துக்க மாட்டானுங்க. அப்றோம் தனியா நின்னு ஒன்னுக்கும் உதவாம பிஞ்சி போன செருப்பா கெடக்க வேண்டியதுதான் உன் பொழப்பே நாறி போயி கெடக்கு. இதுல வீர வசனம் வேற...........
Govind - SA,இந்தியா
2010-09-08 03:15:09 IST
விஜயகாந்தும் வழக்கம் போல பழைய குருடி கதவ திறடி என்று அரசியல் நடத்துகிறார்..இவர்கள் சிறுபான்மை மக்களை ஒட்டு வங்கிகளாக பார்க்கும் மனப்பான்மையை நிறுத்த வேண்டும் ..சும்மா இந்த மாதிரியான stunt வேலைக்கு ஆவாது ....
அபுபஹீம் - ரியாத்,சவுதி அரேபியா
2010-09-08 02:41:24 IST
நோன்பு காஞ்சி குடித்து எதாவது பேசவேண்டும் என்பதற்காக பேசுகிற பேச்சு இது. விஜயகாந்த் தலைமை நிர்வாகிகளில் முஸ்லிம் யாரையாவது நியமிதுல்லாரா? அல்லது இனிமேலாவது ரசிகரல்லாத யாரையும் நியமிக்கத்தான் செய்வாரா? சும்மா எல்லாம் பேத்தல் ஒருபோதும் இவர்களெல்லாம் முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது...
c.ramasamy - tup,இந்தியா
2010-09-08 02:39:30 IST
அவனவன்...முடிஞ்சவரைக்கும் முன்னேறிக்கலாம்னு...போயிட்டு இருக்காங்க....இதுல எங்க சார் மத்தவங்கள பாக்கறது....i...
சோமன் - தோஹா,கத்தார்
2010-09-08 02:37:35 IST
கழக கட்சிகள் என்னெல்லாம் பண்ணுதோ, அதேல்லாம் இதும் பண்ணுது. புனிதமான அந்த இப்தார் விருந்துல போயி அரசியல் பேச எப்புடி தான் மனசு வருதோ இதுங்களுக்கு. வரும் காலங்களிலாவது முஸ்லிம் அன்பர்கள் இந்த மாதிரி அரசியல் வேடதாரிகளை இது போன்ற புனிதமான விழாக்களுக்கு அழைக்காமல் இருக்க வேண்டும். அப்படியே அழைத்தாலும் இஸ்லாத்தை பற்றி மட்டும் பேசினால் போதும் என்று கூறி அழைத்து வர வேண்டும்....
Mohamed Ali - Trichy,இந்தியா
2010-09-08 02:31:18 IST
நாய் வேஷம் போட்டால் குறைத்து தானே ஆகணும். அரசியல் வியாதி ஆகிவிட்டால் என்னவெல்லாம் வேஷம் போடவேண்டி இருக்கிறது. இப்போது குல்லா போட்டுக்கிட்டு இஸ்லாமியர்களை ஏமாத்த பார்க்கிறார்......
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-09-08 02:25:46 IST
என்னால முடில. நான் அப்புறம் வரேன் கொஞ்ச நாள் கழிச்சு. அதுவரைக்கும் இப்படியே பேசி பேசியே ஏமாத்துங்க....
நதி - Germany,இந்தியா
2010-09-08 01:43:59 IST
சென்று நோம்பை திறந்து அவர்கள் தருவதை தின்றுவிட்டு வருவதை விட்டு ஆடு புழுகை போட்டார் போல் எதையாவது பேசுவது............
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-09-08 01:21:05 IST
தமிழக மக்கள் மிகவும் முட்டாள்கள். உலகில் ஒரு இளிச்சவாய் கூட்டம் இருக்குன்னா அது அன்னிக்கும், இன்னிக்கும், என்னிக்குமே சரி தமிழ்நாட்டு மக்கள் தான்....
தமிழ்மகன் - சென்னை,இந்தியா
2010-09-08 01:07:30 IST
நீ இப்படியே பெட்டி பெட்டியா வாங்கிட்டு மக்களை உசுபேத்தி விட்டுகிட்டே இரு, நீயும் உருப்படமாட்ட, மத்தவங்களையும் உருப்படவிடமாட்ட... இந்த முறை அண்ணா அறிவாலயத்தில் இருந்து எத்தனை பெட்டி??? டில்லியில் இருந்து எத்தனை பெட்டி??? மக்களே இந்த ஆள் உங்களை ஏமாற்றுகிறான். பணத்துக்காகவோ, தேர்தலில் 30,40 சீட்டுக்காகவோ நான் அலைபவன் அல்ல என்று கூவி கூவி ஏமாற்று வேலை செய்கிறான்,,,, பெட்டி வாங்கிகொண்டு ஏமாற்று வேலை செய்கிறான்,,,, இம்முறை யாரும் இவனை நம்பி விடாதிர்கள், மேக்கப் போடாமலே உங்கள் முன் நடிக்கிறான்...........
ரமேஷ் - சென்னை,இந்தியா
2010-09-08 00:51:49 IST
யாருப்பா அது... நோன்பு கஞ்சி மட்டும் குடுத்தா எப்படி, தண்ணி, பிரியாணி ஊறுகாய் எங்க, நாங்க இன்னும் நாலு எடத்துக்கு போகணும் இல்ல...
அருண் - chennai,இந்தியா
2010-09-08 00:28:47 IST
நீயும் ஆரம்பிச்சிட்டியாப்பா?சிறுபான்மை மக்களுக்கு உரிமை பெற்று கொடுப்பதை போல கடமைகளையும் சொல்லிக் கொடுங்கடா.மத மர்ற்றம் மட்டும் தன சிறுபான்மை மக்களின் புனித கடமைன்னு நினைச்சி வாழ்ந்து கிட்டு இருக்காங்க.ஒட்டு மொத்தமா மாத்தி உலகின் சிறந்த கலாச்சாரம் உள்ள இந்தியாவ அழிச்சிற வேண்டாம்னு சொல்லுங்க மிஸ்டர் கேப்டன்....
mohideen - arusha,தான்சானியா
2010-09-08 00:26:11 IST
தலைவா நோன்பு கஞ்சி நல்ல இருக்கா...
Jai - NJ,யூ.எஸ்.ஏ
2010-09-08 00:23:36 IST
இன்னொரு கமெடி பீஸ், எத்தனை நாள்தான் இப்படி ஏமாத்துறது.... தயவு செய்து வேற போஸ் கொடுங்க கேப்டன்.......
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-08 00:19:54 IST
சிறுபான்மை மக்கள் மீது தாங்க காட்டும் அக்கறைக்கு நன்றி. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து நீங்கள் சினிமா வாய்ப்புகள் தேடிய போது உங்களுடன் தங்கியிருந்து சினிமா வாய்ப்பு கிடைத்தவுடன் உங்களுடைய ஆரம்ப கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தோடு மட்டுமல்லாமல் உங்களுக்காகவே திருமணம் கூட செய்து கொள்ளாமல் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் ஆருயிர் நண்பர் (இப்பொழுதுமா என தெரியவில்லை) அ.செ. இப்ராகிம் ராவுத்தருக்கு நீங்கள் காட்டிய விசுவாசம் என்ன என்பது தான் எங்களுக்கு தெரியவில்லை. நான் யார் தெரியுமா விஜயகாந்த் சார்?. நீங்கள் சினிமாவுக்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வரவிருந்த காலங்களில் இப்ராகிம் ராவுத்தர் வீட்டில் குடியிருந்த மைதீன் பாய் (உங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் ஒரு காலத்தில். இப்பொழுது ஞாபகம் இருக்கிறதா என தெரியவில்லை) அவர்களுடைய மகன் தான்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக