தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து தென்னிந்திய திருநங்கைகள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள திருநங்கைகளுக்காக தமிழக அரசு திருநங்கைகள் நல வாரியம் அமைத்து அதன் மூலம் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. மேலும் திருநங்கைகள் சமூக மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.
ஆனால் தாய் விழுதுகள் என்ற அமைப்பும், அதன் தலைவி லெட்சுமிபாய்யும் இத்தகைய நலத்திட்ட உதவிகள் திருநங்கைகளுக்கு கிடைக்க விடாமல் செய்வதுடன் திருநங்கைகள் சமூகத்தை வேறுபடுத்தும் நோக்கில் அவர்கள் மீதுப் பொய்ப்புகார் செய்தும், மிரட்டியும் பல்வேறு செயல்பாடுகள் செய்து வருகின்றனர்.
ஆகவே இவர்களைக் கண்டித்து தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில், திருநங்கைகள் உண்ணாவிரதப் போராட்டம் 09.09.2010 அன்று சென்னை காயிதேமில்லத் அருகே உள்ள மணிமண்டபம் அருகே நடைபெற்றது என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக