வியாழன், 20 மே, 2010

கொழும்பு - விமான நிலையத்துக்கிடையில் ஹெலிகொப்டர் சேவை


கொழும்புக்கும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் விஷேட ஹெலிகொப்டர் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் குறூப் கெப்டன் ஜனக நாணயக்கார தெரிவித்தார். கடும் மழை காரணமாக கொழும்பு கட்டுநாயக்க வீதி வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதையடுத்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். விமானப்படையின் ஹெலிடுவர்ஸ் ஹெலிகொப்டர்கள் இந்த சேவைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் குறைந்த கட்டணமே அறவிடப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார். இதேவேளை எந்த ஒரு அவசர நிலைமைக்கும் முகம் கொடுக்கும் வகையில் விமானப்படை ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
____________________________________________________________________________________________

கருத்துகள் இல்லை: