வெள்ளி, 21 மே, 2010

யாழ்ப்பாண மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவை இன்று நீதி மன்றத்தில்



யாழ்ப்பாண மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவை இன்று நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் மேயரின் செயலாளரான அவரின் கணவர் பற்குணராசாவை இன்று பகல் 12 மணிக்குள் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாநகர துணை மேயர் றீகன், சாவகச்சேரி நீதவானை அச்சுறுத்தியதாகக் குற்றஞ் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்த வேளையில் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு விளம்பரம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த விளம்பரப் பிரசுரிப்பில் முக்கியபங்கை வகித்ததாகக் கூறப்படும் மேயரின் செயலாளரான அவரின் கணவர் பற்குணராசாவை இன்று பகல் 12 மணிக்குள் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்த விளம்பரம் நீதிமன்றத்தை அவம திப்பதாக அமைந்துள்ளதாகக் கூறி நீதிமன் றம் மறுப்பு விளம்பரத்தைப் பிரசுரிக்குமாறு உத்தரவிட்டது. எனினும் பிரசுரிக்கப்பட்ட விளம்பரம் திருப்தி தரவில்லை எனக் கூறிய நீதிமன்றம் மீண்டும் மறுப்பு விளம்பரத்தைப் பிரசுரிக்குமாறு மேயருக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த விளம்பரம் தொடர்பாக விசார ணைகளை மேற்கொண்ட பொலிஸார் விளம்பரத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்ற மாநகர ஆணையாளரின் வாக்கு மூலத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
அத்துடன் இந்த விளம்பரப் பிரசுரிப்புத் தொடர்பில் மேயர் அறிந்திருந்ததாகவும் அதேநேரம் அவரின் கணவரும் மேயரின் செயலாளருமான பற்குணராசாவே விளம்பர பிரசுரிப்பில் முக்கிய பங்கை வகித்ததாகப் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந் தனர்.

கருத்துகள் இல்லை: