ஞாயிறு, 16 மே, 2010

தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்களை ரணில் விக்ரமசிங்ஹ ஏமாற்றிவிட்டார் - மனோ கணேசன்


தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியையும் தமிழ் மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ திட்டமிட்டு ஏமாற்றிவிட்டார் என்பது நிருபணமாகியுள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கடந்த மே 10ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ மனோ கணேசனுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடித்திலேயே  ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இக்கடிதத்தில், ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களோடு தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பாக எந்தவெரு தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடத்  தயார் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக  அடுத்த வாரமளவில் அறிவிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடளுமன்ற உறுப்பினரான பிரபா கணேசன் நாடளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: