செவ்வாய், 18 மே, 2010
யாழ் மாநகர சபையின் துணை முதல்வர் கைது என்பது ஒரு மொட்டை கடிதத்தை கொண்டே கைது செய்யபட்டுள்ளார்
யாழ் நகரை அபிவிருத்தி செய்ய தமிழ் மக்கள் முன்வரவேண்டும் என யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணம் ஞாயிற்றுக்கிழமை ரிபிசியில் நடைபெற்ற அரசியல் கலந்துதுரையாடலில் போது வேண்டுகோள் விடுத்துள்ளார் அண்மைக் காலத்தில் யாழ்.மாவட்டத்தில் நடந்த கடத்தல் முயற் சிகளில் பல தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளும் காதலர்களின் சட்டவிரோத திருமண முயற்சிகளுமேயாகும். எனினும் இவற்றை யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர்ப் பத்திரிகைகள் சில கடத்தல் சம்பவங்கள் என்றே செய்திகளைப் பிரசரித்து நாடுகடந்த தமிழ் ஈழ் அரசிற்க்கு ஆதரவு தேடும் முயற்சிற்களில் ஒன்றாகவே காணபடுகிறது. யாழ் மாநகர சபையின் துணை முதல்வர் கைது என்பது ஒரு மொட்டை கடிதத்தை கொண்டே கைது செய்யபட்டுள்ளார் அது தொடர்பாக மக்களின் வேண்டுகோள்ளுக்கு இணங்க நீதிதேவதை நீதி வழங்க என்ற அடிப்படையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன் தவிர நீதிதுறை நான் விமர்சிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் அணுசரனையுடன் ஜனாதிபதி இன்னும் மூன்று மாதகாலத்திற்க்குள் 13வது அரசியல் திருத்த சட்டத்தை அமுல் படுத்துவதுன் ஊடாக முழுமையான தீர்வு ஒன்றை காணவுள்ளதாக ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளலஸ் தேவநந்தாவுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி கூறியதாக தெரிவித்துள்ளார். மிகவும் பலமான அமைப்பான விடுதலை புலிகளால் கூட தமிழ் ஈழ விடுதலை வெற்றி பெற முடியவில்லை மற்றவர்களால் எவ்வாறு தமிழ் ஈழ அடைய முடியும் என கேள்வி எழுப்பினார். நல்லூர் ஆலய பகுதிகளில் தற்காலிகாகமாக நடைபாதை வியாபாரிகளுக்கு மக்களின் உடனடி தேவைகளுக்காக தற்காலிகமாக அனுமதி வழங்கபட்டிருந்தது ஆனால் இப்பொழுது அப்பகுதி முழுமையாக புனிதபடுத்தபட்டிருப்பாதாகவும் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணம் தெரிவித்தார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக