திங்கள், 17 மே, 2010

கைதுக்காக துடித்த வடிவேலு ஆசையை நிறைவேற்றி விட்டேன் -சிங்கமுத்து


சென்னை: என்னை கைது செய்து உள்ளே அடைக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார் வடிவேலு.இப்போது அவரது ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன் என்று கூறியுள்ளார் சிங்கமுத்து.

நேற்று மாலை திடீரென கைது செய்யப்பட்டார் சிங்கமுத்து. அவரை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு போலீஸார் அழைத்து வந்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டபோது போலீஸ் வேனில் சிறிது நேரம் அமர வைக்கப்பட்டிருந்தார் சிங்கமுத்து. அப்போது தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

என்னை ஜெயிலுக்கு அனுப்ப அவர் (வடிவேலு) ஆசைப்பட்டார். அவருடைய ஆசையை நிறைவேற்றி விட்டேன்.

எந்த தவறும் செய்யாமல் தண்டனை பெறுபவர்கள், கடவுளின் ஆதரவை பெற்றவர்கள் ஆகிறார்கள். அந்த வகையில் நான் இப்போது கொடுத்து வைத்துள்ளேன். கடவுள் வடிவேலுக்கு தண்டனை கொடுப்பார்.

செல்வாக்கு உள்ள ஒருவர் பொய் புகார் கொடுத்து யாரையும் ஜெயிலுக்கு அனுப்பலாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் ஆகும்.

எத்தனை நாளைக்கு அவர் (வடிவேலு) இப்படி ஆட்டம் போடுவார் என்றும் பார்ப்போம். நான் 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு இப்போது எந்த குறையும் இல்லை, ஜெயிலுக்கு போய் விட்டு வருகிறேன் என்றார்.

காவல்துறைக்கு நன்றி - வடிவேலு

சிங்கமுத்து கைது செய்யப்பட்டது குறித்து நடிகர் வடிவேலு கருத்து தெரிவிக்கையில், சட்டம், தன் கடமையைச் செய்திருக்கிறது. என்னை சிங்கமுத்து ஏமாற்றி மோசடி செய்த வழக்கு பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து அவர்களின் கடமையை இப்போது செய்திருக்கிறார்கள். காவல்துறைக்கு நன்றி என்றார்.

பதிவு செய்தவர்: சும்மா ஒரு guess
பதிவு செய்தது: 17 May 2010 3:20 pm
வடிவேலு தான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்துக்கு சிங்கமுத்துவை பினாமியா போட்டு இருப்பார். அதான் வடிவேலுவால டக்குனு கேஸ் போட முடியல. இந்த கேஸ்'ஐ பொருத்தவரைக்கும் சிங்கமுத்துவுக்கு வந்தா மலை; போனா மசுரு'ங்கற மாதிரி... ஆனால், வடிவேலுவுக்கோ கஷ்ட்டப்பட்டு, கடின உழைப்பால் வந்த சொத்து.... போனா மசுரு'நு சொல்ல முடியாது. அவருக்கு உசுரே போற சமாசாரம் மாதிரி... வடிவேலு மேல் தவறு இருக்குமானால், அது சிங்கமுத்துவை பினாமியாய் பயன்படுத்திகொண்டதுதான்.

கருத்துகள் இல்லை: