டெல்லியில் சாலையோரத்தில் குழந்தை பெற்ற பெண்: மருத்துவ சிகிச்சை இல்லாததால் 4 நாள் கழித்து பரிதாப சாவு
டெல்லி கன்னாட் பிளேஸ் சங்கர் மார்க்கெட் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பிசியாக இருக்கும். இங்கு சாலையோரத்தில் கர்ப்பிணி ஒருவர் உட்கார்ந்து இருந்தாள். டெல்லியில் மழை பெய்ததால் அவளைச் சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தது.
திடீரென்று கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைப்பார்த்த அருகில் இருந்த உணவு விடுதி உரிமையாளர் பிரடெரிக் அதிர்ச்சி அடைந்தார். அவர் துணிக்கடைக்கு சென்று துணி வாங்கி வருவதற்குள் கர்ப்பிணிக்கு தானாகவே குழந்தை பிறந்துவிட்டது. அது பெண் குழந்தையாகும்.
அவர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையைச் சுற்றிலும் நாய்கள் நின்று கொண்டு இருந்தது. உடனே பிரடெரிக் அவற்றை துரத்திவிட்டார்.
அந்த குழந்தையை எடுத்து காப்பாற்றி வந்தார். தாயின் உடல் முழுவதும் சுகாதாரமின்றி இருந்ததால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை. இதனால் பிரடெரிக் பெண் வியாபாரி ஒருவரின் துணையோடு குழந்தைக்கு பால் கொடுத்து பாதுகாத்தார்.
ஆனால் தாயை கவனிக்க யாரும் முன்வரவில்லை. 4 நாள் கழித்து தாய் பரிதாபமாக இறந்துவிட்டாள். குழந்தையை மட்டும்தான் காப்பாற்ற முடிந்தது. அதன் பிறகு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
பிரடெரிக் அந்த குழந்தைக்கு கரிஷ்மா என்று பெயர் சூட்டினார். போலீசார் அந்த குழந்தையை வாங்கி கோல் மார்க்கெட்டில் உள்ள பாதிரியார் இல்லத்தில் ஒப்படைத்தனர்.
அந்த குழந்தையை பிரடெரிக் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
comment poopathi:
ஏதோ வளர்ந்து வரும் வல்லரசு என்கிறார்களே? கம்புட்டர் துறையில் ஏற்கனவே வல்லரசாகி விட்டதாகவே சொல்கிறார்களே? சந்திரனுக்கு போகிறோம் அணுக்குண்டு வெடிக்கிறோம் கிரிக்கெட் வீரர்களுக்கு கோடி கொடியாக கொடுக்கிறோம் இன்னும் என்னனவோ பெருமைகள். அமபனிக்கு உலகில் முன்றாவது இடம் மித்தலுக்கு அடுத்த இடம் பெரிசு பெரிசாக கதை விடுகிறார்கள்.
தலைநகரின் தலையாய பகுதியில் மனித பண்புகள் இவ்வளவு மலினப்பட்ட ஒரு நாடும் மக்களும் எப்படித்தான் தாங்கள் மனிதர்கள் என்று மார்தட்டிக் கொள்கிறார்களோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக