ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

தமிழகத்தில் அரசியல் பூகம்பம் வைகோ நெடுமாறனின் சாயம்,நக்கீரனில்

கே.பி. என்கிற குமரன்பத்மநாபன், ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.அந்த  பேட்டியில், ""இந்திய அனு சரணையுடன் கூடிய யுத்த நிறுத்தம் வரும் சாத்தியத்தை, அரசியல் ஆதாயத்திற்காக கெடுத்தவரே வைகோதான்'' என்று கடுமையாக குற்றம்சாட்டியதோடு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் நெடுமாறன், தோழர் மகேந்திரன் உள்ளிட்டோரையும் விமர்சித்திருக்கிறார்.இவரது பேட்டி தமிழர்களிடையேயும் அரசியல் ரீதியாகவும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த சூழலில், இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரனிடம் கேட்டபோது,’’ ""இந்த பிரச்சினை பற்றி நான் எதுவும் சொல்வதற் கில்லை.கே.பி.என்பவர் மார்க்ஸிஸ்ட் எம்.எல்.ஏ.மகேந் திரனை பற்றித்தான் சொல்லியிருக்கிறார்''’’என்றார். மார்க்ஸிஸ்ட் மகேந்திரனோ,’’""நடேசன் என்பவரிடம் எந்த காலத்திலும் எனக்கோ எங்கள் கட்சிக்கோ தொடர்பு இருந்ததில்லை. அடிப்படையில் விடுதலைப்புலி களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் நாங்கள்'' என்று மறுக்கிறார். அன்றைய காலக் கட்டத்தில் ஈழப்பிரச்சினையில் அனுசரணையோடு இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நடேசனோடு தொடர்பில் இருந்திருப்பதை அறிந்த காரணத்தால் நாம் சி.மகேந்தரனிடம் மீண்டும் இது பற்றி கேட்ட போது அது குறித்துப்பேசவே மறுத்து விட்டார்.
இதனை அடுத்து,வைகோவின் கருத்தறிய அவரை தொடர்புகொள்ள முயற்சித்த போது தொடர்பு கிடைக்கவே இல்லை. இதனால் ம.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான நன்மாறனை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினோம்.அவரும் வைகோவிடம் பேசிவிட்டு, ’கே.பி.யின் குற்றச்சாட்டுக்கு வைகோவின் பதில்’என்று வைகோவின் கருத்தை நமக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்.
வைகோ நமக்கு அளித்துள்ள அந்த பதிலில், ""பத்மநாபன் கூறியதுஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய்.போர் நிறுத்தம் ஏற்பட்டால் என்னை விட, பழ.நெடுமாறனை விட நிம்மதி அடைகிறவர்கள் யாரும் இருக்க முடியாது. எவ்வகையிலாவது போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடாதா என்று நாங்கள் துடித்தோம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், புலிகள் அமைப்பினருக்கும் அவர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றி எந்தகாலத்திலும் நாங்கள் யோசனை கூறியது கிடையாது.
ஈழத்தின் நிலைமைகளுக்கு ஏற்ப அம்மக்களின் நலன்களுக்கு ஏற்ற முடிவுகளை பிரபாகரன் மேற்கொள்வார். அப்படிப்பட்ட நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில்பதவி ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தை தடுத்தேன் என்று குமரன் பத்மநாபன் உளறி இருக்கிறார்.
2009 ஏப்ரல் 7-ந் தேதி நடேசன் என்னிடம் பேசும்போது,’தொகுதி உடன்பாடு முடிந்துவிட்டதா அண்ணா?’ என்று கேட்டார்.அதற்கு நான்,’ கொஞ்சம் நெருடல் இருக்கிறது. ஆனால் அணி மாறமாட்டேன். தேர்தலில் போட்டி யிடாமல் விலகிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்’ என்று சொன்னேன்.
அன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் தொடர்பு கொண்டார் நடேசன்,’’அண்ணா நீங்கள் அவசியம் போட்டியிட வேண்டும் என்று தலைவர் பிரபாகரன் விரும்புகிறார் என்று குறிப்பிட்டார் மே 13. வாக்குப்பதிவு முடிந்திருந்தது. இரவு பத்தேகால் மணிக்கு என்னிடம் பேசிய நடேசன் ஜெயித்து விடலாமா அண்ணா? என்றார். அதற்கு நான்,’என் தொகுதியில் கோடிக்கணக்கில் ஆளுந்தரப்பு பணத்தை கொட்டிவிட்டது. சொற்ப வித்தி யாசத்தில் ஜெயிக்கலாம் என்றேன்.
பிரபாகரன், நடேசன் உள்ளிட்டோரின் நிலைமையைப் பற்றி லைப்பட்டபோது,’பயப்படாதீங்க அண்ணா!நாங்க வெல்வோம் அண்ணா!’என்றார் டேசன்'' ’என்று தெரிவித்துள்ள வைகோ, ’""இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டுமென்று உலகின் பல நாடுகள் வேண்டு கோள் விடுத்து இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தபோது...இந்திய அரசு  ஒப்புக்குகூட போர் நிறுத்தம் வேண்டும் என்று சொல்லவில்லை.
இதுதான் உண்மை. அப்படி யிருக்க, போர் நிறுத்தம் குறித்து இந்திய அரசினர் யோசனை சொன் னார்களாம்.அதனை நாங்கள் தடுத்தோ மாம்''’என்கிறார் வைகோ.
மேலும் ""அனைத்துலக அரங்கில் போர்க்குற்றவாளியாக ராஜபக்சே நிறுத்தப்படுவார் என்று கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள என்னை களங்கப்படுத்த ராஜபக்சேவின் கைக்கூலியாகிவிட்ட குமரன் பத்மநாபனை  போதுபயன்படுத்தியுள்ளனர். குமரன்பத்மநாபன், கருணா போன்ற துரோகிகளுக்குமன்னிப்பே கிடையாது'' என்கிறார் வைகோ.
பழ.நெடுமாறனைப் பற்றியும் தனது பேட்டியில்  சில விவரங்களை  கே.பி. சொல்லியிருப்பதால், அது குறித்து நெடுமாறனை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது,’’""கே.பி.யின் ஆதரவு பத்திரிகையாக நக்கீரன் மாறிவிட்டது. அதனால் நான் எந்த கருத்தையும் உங்களுக்கு சொல்வதற் கில்லை''’என்று கூறிதொடர்பைத் துண்டித்துக்கொண்டு விட்டார்.
ஈழப்பிரச்சினையில் துவக்க காலத்திலிருந்தே எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல் உணர்வுபூர்வமாக தமிழினத்தின் பக்கம் நின்று இலங்கை அரசின் கோரமுகத்தை வெளிக்கொண்டுவந்ததில் நக்கீரனுக்கு பெரும்பங்கு உண்டு என்பதையும் அதற்கு ஏராளமான ஆதார செய்திகளை தரமுடியும் என்பதையும் லட்சோப லட்ச  நக்கீரன் வாசகர்கள் நன்கு அறிவார்கள்.
-இளையசெல்வன்

கருத்துகள் இல்லை: