ராதா மனோகர் : கீரன் : பக்தி அப்படீனா என்ன.?
சங்கரன் : பக்தின்னா அன்பு..!
கீரன் : அன்புன்னா அன்புன்னு சொல்ல வேண்டியதுதானே? அதென்ன பக்தி ...யுக்தி?
சங்கரன் : சாதாரண மனிதர்களுக்கு இடையே இருப்பது அன்பு .கடவுளிடம் நமக்கு இருப்பது பக்தி!
கீரன் : ஓஹோ .. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
சங்கரன் : கடவுள் நம்மைவிட ரொம்ப உசத்தி!
வெறும் அன்புன்னு சொன்னா?
அது மதிப்பில்லை அதனாலேதான் பக்திங்கிறோம்..!
கீரன் : அதாவது கொஞ்சம் பயம் கலந்த அன்புன்னு வச்சுக்காமா..?
சங்கரன் : அதே அதே .. அதான் பக்திங்கிறது !
கீரன் : பயம் இருக்கும் இடத்தில் வெறுப்புதானே இருக்கும்? அன்பு எப்படி வரும்கிறேன்.?
சங்கரன் : இது விதண்டாவாதம் .. அது வேற இது வேற ... அது அன்பு இது பக்தி!
கீரன் : அதான் அது என்னங்கிறேன்..?
சங்கரன் : இதெல்லாம் வீண் விவாதம்!
கீரன் : அதாவது பெரியவாகிட்ட பதில் இல்லை சரியா..?
சங்கரன் : எல்லாம் தெரிஞ்சவா ஆட்டம் சொல்றியே பக்தின்னா என்னான்னு நீர் சொல்லும் ஒய்?
கீரன் : பயமும் அன்பும் நேர் எதிர் உணர்ச்சிகள்! ஒன்றை ஒன்று வெறுக்கும் உணர்வுகள், அவை ஒரு போதும் ஒரு புள்ளியில் சந்திக்காது..!
இது இரண்டையும் சேர்த்து சொதப்பி நம்மவா மூஞ்சிலே ஒரே ..... ..
உங்களவா கண்டு பிடிச்ச மிகப்பெரிய மோசடி சொல்தான் பக்திங்கிறது.
அப்படி ஒரு விடயமே இல்லை ..
வெறும் பயம்கிறதை .. அன்புன்னு பெயிண்டு அடிச்சு ஏமாத்தறீங்க சாமி!
சங்கரன் : நீ சொல்ற மாதிரி கூட இருக்கலாம் .. ஆனா இதை ஊரில எவன் நம்புவான் ?
பக்தின்னா முக்கால்வாசி பேர் கன்னத்தில போட்டுக்குவான்!
கீரன் : வரலாற்றில் முக்கால் வாசிபேர் தவறான சிந்தனை உடையவர்கள்தான் என்பதுதான் புள்ளிவிபரம்.
ஆனா முக்கால்வாசி இருட்டுக்கும் ஒரு சிறு விளக்கு போதுமே சாமி?
அறிவு என்பது ஒரு ஒளிவிளக்கு..! மீள்பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக