லங்காஸ்ரீ : ஹிஸ்புல்லாவின் ரகசிய பதுங்கு குழிகளில் 15,000 கோடி ரொக்கம்., இஸ்ரேல் வெளியிட்ட ஆதாரம்
ஹிஸ்புல்லாவின் ரகசிய பதுங்கு குழிகளை இஸ்ரேல் இலக்காக்கியுள்ளது.
லெபனான் மருத்துவமனை ஒன்றின் கீழ் உள்ள பதுங்கு குழியில் தங்கம் மற்றும் பணத்தாள்களை குவியல் குவியலாக இருப்பதை உறுதிப்படுத்தும் காணொளியை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் தலைவர் யஹ்வா சின்வார் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்போவதாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தது.
இந்த உத்தரவில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை ஹிஸ்புல்லாஹ் பொருளாதார ஆதாரங்களை இலக்கு வைத்துள்ளது.
Israel Lebanon War, Israel hezbollah War, secret Hezbollah bunker
மருத்துவமனைக்கு அடியில் உள்ள நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தீவிரவாத அமைப்புக்கு சொந்தமான தங்கம் மற்றும் பணத்தாள்கள் குவியல் குவியலாக கிடப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் (IDF) செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி இது குறித்து கூறியதாவது., "ஹிஸ்புல்லாவின் நிதி ஆதாரங்களை நாங்கள் தொடர்ந்து தாக்கி வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் ஒரு பதுங்கு குழியை அழித்தோம்.
வங்கியாளரிடம் ஏராளமான தங்கமும், ஆயிரக்கணக்கான டொலர்கள் ரொக்கமும் இருந்ததை நாங்கள் கண்டோம். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த இந்த பணம் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தீவிரவாத குழு பெய்ரூட் நதிக்கரையில் மற்றொரு சாலையை அமைத்துள்ளது. அல்-சாஹெல் மருத்துவமனையின் கீழ் உள்ள வங்கியில் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் மற்றும் தங்கக் குவியல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்கள் இதுவரை பதுங்கு குழியைத் தாக்கவில்லை. பதுங்கு குழியில் 500 பில்லியன் டொலர் (
இலங்கை பணமதிப்பில் ரூ.14,655 கோடி) ரொக்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது" என்று ஹகாரி கூறினார்.
பதுங்கு குழி அமைந்துள்ள பகுதியில் உள்ள மருத்துவமனையை அவர்கள் தாக்க மாட்டார்கள் என்றும் அவர்களின் போர் ஹிஸ்புல்லாவுடன் மட்டுமே இருக்கும் என்றும் ஹகாரி தெளிவுபடுத்தினார்.
"லெபனான் குடிமக்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது," என்று அவர் கூறினார். இந்த சம்பவங்களை அடுத்து அதிகாரிகள் மருத்துவமனையை காலி செய்து வருவதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக