திங்கள், 20 மே, 2024

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

 தினமணி : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு
“ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார்.
அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இப்ராஹிம் ரைசி, அதன் பின்னர் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டார்.
அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.



ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

இதனை ஈரான் அரசு ஊடகம் தெரிவித்தது.மோசமான வானிலை காரணமாக மீட்பு குழுக்களால் விபத்து நடந்த பகுதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஹெலிகாப்டரில் ஈரான் அதிபருடன் இரண்டு அமைச்சர்கள் அதிகாரிகளும் பயணம் செய்தனர். ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது.

விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து சாம்பலானதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.”,

கருத்துகள் இல்லை: