திங்கள், 20 மே, 2024

வள்ளலார் உயர் ஆய்வு மையம் அரசு இப்போதும் திட்டமிட்டு ஆரம்பித்த அதே இடத்தில் வேண்டும் !

May be an image of 2 people

Neyveli Ashok   : ஆன்மீக கலகக்காரர் வள்ளலார் - பெருவெளி பகுதியில் கண்டிப்பாக உயராய்வு மையம் வேண்டும் :
பிபிசி போன்ற பன்னாட்டு முதலிகளின் ஊடகங்களும் இப்போது வடலூர் பகுதியை பினம்தின்னி கழுகு போல வட்டம் அடிக்கிறது.
எப்படியாவது திராவிட கருத்துகளுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய உதவ வேண்டும் என.....
ஆன்மீக கலகக்காரர் வள்ளலார் அவர்களை சனாதன தர்மத்தின் உச்ச  நட்சத்திரம் என்று ஒரு பார்ப்பான் கூறியபோது நெஞ்சை நிமிர்த்தி அதை எதிற்காத புரட்சி ( குள்ளநரி) கூட்டங்கள்,
தற்போது திராவிட மாடல் அரசின் நாயகன் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் சன்மார்க்க சபை அருகே ஒரு வள்ளலார் உயர் ஆய்வு மையம் கொண்டு வர வேலை ஆரம்பித்த உடன் நெஞ்சை நிமிர்த்தி வருகிறது குறைக்க....
யார் இவர்கள் ?


கருவாட்டு சாம்பார் சாப்பிட்டு, தமிழ் இந்து என்று புகழ் பாடி, தங்களுக்கும் ஒரு பூணூல் கிடைக்காதா ? தங்களுக்கும் அக்ரஹாரா வாசனை கிடைக்காதா ?
என்று எண்குபவர்கள் தான்.
இந்த கும்பல் முன்வைக்கும் கூற்று என்னவென்றால் -
" பெருவெளி பகுதியில் அந்த ஆய்வு மையம் வர கூடாது, அந்த இடத்தை மாற்ற கூடாது என்று வள்ளலார் கூறினார் " என்று கம்பி கட்டும் கதைகள் விடுகின்றார்கள்.

ஆனால் சிலை வழிபாடு கூடாது என்று கூறிய வள்ளலார் அவர்களின் சிலையை அம்மையார் ஜெயலலிதா அவர்களின் அரசு அதே சன்மார்க்க பகுதியில் நிறுவிய நேரத்தில் இந்த புரட்சி கும்பல் எங்கே சென்றது ?

இவர்கள் கூறுவது போல பெருவெளி பகுதி என்பது ஏதோ அந்த திடல் ( அதுவும் இப்போது அறிவு தேடல் அல்லாத அத்தனை செயலுக்கும் கூடாரமாக இருக்கிறது ) மட்டுமே அல்ல ....
மொத்த உலகையும் தான் அவர் குறிப்பிடுகிறார்....

பெருவெளி பகுதியை ஏதோ ஒரு கருவறை போல மாற்ற பார்க்கிறது இந்த கும்பல்....
கண்மூடி வழகெளாம் மன்மூடி போக என்று கூறிய வள்ளலார் ஆவர்களை இந்த பிற்போக்கு கும்பல் சுவீகரிக்க பார்க்கிறது...
தமிழ் நாடு அரசு இந்த உயர் ஆய்வு மையம் நிறுவி முடித்த பிறகு, அந்த பகுதி வள்ளலார் விரும்பிய உண்மையான அறிவு தேடல் இடமாக, பல்வேறு கோட்பாடுகளை வள்ளலார் கோட்பாடும் பொருத்தி பார்க்க ஏதுவாகும்....
வள்ளலார் உயர் ஆய்வு மையம் வேண்டும்..... அதுவும் அரசு இப்போதும் திட்டமிட்டு ஆரம்பித்த அதே இடத்தில் வேண்டும் !

கருத்துகள் இல்லை: