புதன், 22 மே, 2024

அமரர் ராஜீவ் காந்தி கொலையால் இலாபம் அடைந்தவர்கள் பட்டியல்

 Ilango Manivannan :  ராஜீவ்காந்தி கொலையால் லாபம் அடைந்தவர்கள் யார்?
ராஜீவ்காந்தி  கொல்லபட்டபோது
சந்திரசேகர் பிரதமர்,
சுப்ரமணியம் சுவாமி சட்ட அமைச்சர், N.K சிங் IAS ஒன்றிய உள்துறை செயலர், M.K நாராயணன் மத்திய உளவுத்துறை தலைவர்,
R.K ராகவன் தமிழ்நாடு காவல்துறை தலைவர்.
இதில் N.K சிங்கும், R.K ராகவனும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான
ராஜீவ்காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தவர்கள்.
இதில் N.K நாராயணன், மே 20, 1991 அதாவது ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட நாளுக்கு முந்தைய நாள், ராஜீவ்காந்திக்கு
SPG பாதுகாப்பு கேட்டு N.K சிங்'க்கு கடிதம் எழுதுகிறார். அன்று ஞாயிற்றுக்கிழமை. மறுநாள் திங்கள்கிழமை ராஜீவ்காந்தி கொல்லப்படுகிறார்.


ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட போது அவருக்கு மத்திய அரசின் சார்பில் துப்பாக்கி ஏந்திய ஒரே ஒரு Personal Security Guard தான் உடனிருந்தார். அவரும் ராஜீவுடன் மரித்தார். 1991ல் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராஜீவ்காந்திக்கு பாதுகாப்பு வழங்குவதை அந்தந்த மாநில காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்.      
விடுதலைப்புலிகளை காரணமாக வைத்து தமிழகத்தில் அப்போதைய திமுக அரசு கலைக்கப்பட்டு, "கவர்னர் ஆட்சி" நடந்தது.
மே 21 ல் ராஜீவ் காந்தி கொல்லப்படுகிறார். பின்னர் நடந்த அரசியல் மாற்றம் அனைவரும் அறிந்ததே.
"நரசிம்மராவ்" பிரதமர் ஆகிறார்.
சுப்ரமணிய சுவாமி 'காட்' ஒப்பந்தக் குழுவின் தலைவராகிரார். (மத்திய அமைச்சருக்கான அந்தஸ்து உள்ள பதவி)
ஜெயிக்கவேண்டிய கலைஞர் தோற்று, ஜெயலலிதா முதலமைச்சர் ஆகிறார்.
ராமருக்கு இந்தியாவில் கோயில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவதென்று தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார்.
இதை தொடர்ந்து
பாபர் மசூதி இடிக்கப்படுகிறது.
இதில் பலரும் கவனிக்காதது,
சுப்ரமணியம் சுவாமி
தன் கட்சியை பாஜகவில் இணைக்கிறார்,
பின்னர் மோடி பிரதமர் ஆனவுடன் பாஜக M.P ஆகிறார்.
N.K சிங்  2002 ல் பாஜகவில் இணைந்து, வாஜ்பாய் அமைச்சரவையில் இணைகிறார்.
M.K நாராயணன்,
2014 ல் மோடி பிரதமரான பின்னர், மேற்கு வங்க கவர்னர் ஆகிறார் R.K ராகவன் வாஜ்பாய் ஆட்சியில், CBI இயக்குநர் ஆகிறார். பின்னர் 2002 குஜராத் கலவர வழக்குகளை விசாரிக்கும் SIT தலைவர் ஆகிறார். 2014-ல் மோடி பிரதமரான பின்னர், Post Retirement Service ஆக 'சைப்ரஸ்' நாட்டு தூதராகிறார், தற்போதுவரை இந்த பணியில் தொடர்கிறார் என்று நினைக்கிறேன்.
ராஜீவ்காந்தி'யின் கொலையினால் அரசியல் பலனடைந்தது யார்.?
விடை தெரிந்தவர்
சொல்லலாம்...

கருத்துகள் இல்லை: