;புதிய தலைமுறை : தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என்று அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவித்துள்ளார்.
வழக்குகளை சந்திக்க தயார்
தமிழக அமைச்சர் உதயநிதி,"கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க கூடாது. அதன் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும்.
அதை போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி" என்று கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன.
ஆனாலும், அவர் தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியுள்ளார்.
உதயநிதி தலைக்கு ரூ.10 கோடிஇந்நிலையில், உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர், உதயநிதி ஸ்டாலின் போட்டாவை கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
இதற்குமுன், கடந்த 2007 ஆம் ஆண்டு ராமர் பாலம் குறித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தலையை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கத்தை அயோத்தியில் உள்ள துறவிகள் வழங்குவார்கள் என்று ராம்விலாஸ் வேதாந்தி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழக அமைச்சர் உதயநிதியை பற்றி இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக