tamil.goodreturns.in - Prasanna Venkatesh : சீனா உடனான பிரச்சனைக்கு மத்தியில் தைவான் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தச் சேர்தல் பல பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியாகவும் அமையலாம், அல்லது சீனா - தைவான் மத்தியிலான பிரச்சனையை மேலும் விரிவாக்க கூடும், காரணம் தைவான் நாட்டின் அரசியல் களம் அப்படிப்பட்டது.
தைவான் நாட்டில் 2 பிரதான அரசியல் கட்சிகள் உள்ளது. கோமின்டாங் (Kuomintang), சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவை, அதேபோல் சினாவின் கொள்கைகளுக்கு அப்படியே ஒப்புக்கொள்ளும் கட்சி. இந்தக் கட்சிக்கு Nationalist Party of China (NPC) or Chinese Nationalist Party (CNP) என்ற பெயர்களும் உள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டி போடும் தொழிலதிபர்.. இன்று தைவான் நாளை இந்தியாவா..?
அடுத்த கட்சி தைவான் நாட்டின் தேசியவாதம் மற்றும் சுதந்திரத்தைப் பரவலாக ஆதரிக்கும் ஜனநாயக முற்போக்குக் கட்சி அதாவது Democratic Progressive Party (DPP). தற்போது Tsai Ing-wen தலைமையிலான ஆட்சி ஜனநாயக முற்போக்குக் கட்சி உடையது.
தைவான் தலைநகர் தைபே-வின் மேயராக இருக்கும் Ko Wen-je தலைமையிலான Taiwan People's Party (TPP) மற்றும் தனிநபர் அதிபர் தேர்தல் போட்டியாளரான Terry Gou களமிறங்கியுள்ளார். இதன் மூலம் 4 முனை போட்டியாக இருப்பது மட்டும் அல்லாமல் Terry Gou மீது உலக நாடுகளின் மொத்த கவனமும் திரும்பியுள்ளது. யார் இந்த Terry Gou..?
சர்வதேச உற்பத்தித் துறையில் கலக்கி வரும் தைவான் நாட்டின் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Hon Hai Precision Industry Co Ltd-ன் நிறுவனர் தான் டெர்ரி கோவ். தொழிலதிபர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதியது அல்ல, ஆனால் டெர்ரி கோவ் தற்போது தைவான் அதிபர் தேர்தலில் தனி ஆளாக அதிபர் தேர்தலில் போட்டிப்போடுகிறார்.
கடந்த 50 வருடத்தின் தைவான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தக வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த டெர்ரி கோவ்-ன் Hon Hai நிறுவனத்தின் வெற்றியை அடுத்து அந்நாட்டின் அரசியலிலும் பல முக்கிய மாற்றத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டு 72 வயதான டெர்ரி கோவ் போட்டிப்போட உள்ளார்.
தமிழ்நாட்டில் EV தொழிற்சாலை.. பாக்ஸ்கான் போடும் மாஸ்டர் பிளான்.. 2024 வரை திக் திக்..! தமிழ்நாட்டில் EV தொழிற்சாலை.. பாக்ஸ்கான் போடும் மாஸ்டர் பிளான்.. 2024 வரை திக் திக்..!
குறிப்பாக Tsai Ing-wen தலைமையிலான ஆட்சி ஜனநாயக முற்போக்கு கட்சியின் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு மூலம் Hon Hai நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதைச் சரி செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் டெர்ரி கோவ்-க்கு ஏற்கனவே சீன அரசியல் மற்றும் தொழிற்துறை வட்டாரத்தில் நல்ல இணைப்புகளும், நற்பெயரும் இருப்பதால் ஆட்சி அதிகாரம் கிடைத்தால், விரைவில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என நம்பினார்.
இதனால் டெர்ரி கோவ் முதலில் சீனாவுக்கு ஆதரவான கோமின்டாங் (Kuomintang) கட்சியில் சேர்ந்தார், ஆனால் கட்சி நிர்வாக இவரைத் தேர்வு செய்யாமல் வேறொரு நபரைத் தேர்வு செய்தது. இதனால் கடுப்பாகி கட்சியை விட்டு விலகி தற்போது தனிநபராக (Independent Candidate) அதிபர் தேர்தலில் போட்டிப்போட உள்ளார்.
இந்த நிலையில் டெர்ரி கோவ், ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் நிறுவிய ஃபாக்ஸ்கான் நிர்வாகக் குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து Hon Hai Precision Industry Co Ltd வெளியிட்ட அறிக்கையில் அதன் முன்னாள் தலைவரான Gou தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாகத் தெரிவித்தது.
இதன் மூலம் டெர்ரி கோவ் தனது அரசியல் பயணத்தை மிகவும் சீரியஸாகத் தனது 72 வயதில் துவங்கியுள்ளார். தைவான் நாட்டின் அரசியல் கள நிலவரத்தின் படி தற்போது 4 முனை போட்டி இல்லாமல் ஆட்சியில் இருக்கும் ஜனநாயக முற்போக்கு கட்சி-க்கு எதிராக டெர்ரி கோவ் மட்டும் தனித்துப் போட்டியிட்டால் கட்டாயம் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தைவான் நாட்டின் பெரும் தொழிலதிபரான டெர்ரி கோவ் அதிபர் தேர்தலில் போட்டிப்போடுவது போல் இந்தியாவிலும் பிரதமர் பதவிக்கு இந்திய தொழிலதிபர்கள் போட்டிப்போடும் வாய்ப்பு கிடைக்குமா..? இந்தியாவில் கட்சிகள் ஆதரவு இல்லாமல் தனித்துப் போட்டியிடுவது சாத்தியம் இல்லாத ஒன்று. ஆனால் கட்சிகள் ஆதரவுடன் பெரும் தொழிலதிபர்கள் போட்டிப்போட்டால் மக்களின் ஆதரவும் எப்படியிருக்கும் கமெண்ட் பண்ணுங்க.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Terry Gou foxconn founder and billionaire wants to be president of Taiwan; resigns from foxconn board
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக