செவ்வாய், 5 செப்டம்பர், 2023

திமுக ஐ டி விங் .. கலைஞர் வசைபாடியவர்களுக்கே முதலிடம்.. எந்த தகுதியும் அற்ற ஒரு கூட்டத்தின் ஆட்டம்

 ஆனந்த்குமார் சித்தன் :  மீண்டும் ஐடி விங்குக்கே வரேன்..
மற்ற எல்லா கட்சியும் ஐடி விங்குக்கு எப்படி ஆள் செட் பண்றாங்க ?
சோசியல் மீடியாவில் யார் யார் நிறைய ரீச் இருக்கு..
யாருக்கு கண்டெண்ட் எடுக்க தெரியுது.. ஆர்கனைஸ் பண்ண வருது..
யாருக்கு ரைட்டிங் நல்லா வருது..
யாருக்கு கட்சி , கொள்கை எல்லாம் தெரியுது..
யாருக்கு அடிப்படை அரசியல் வரலாறு தெரியும்..
யாரால் ஒரு ஸ்ட்ராட்டஜி செட் பண்ண முடியும்..
யாரால் இது அத்தனையும் சேர்த்து ஆட்களை கம்யூனிகேட் பண்ண முடியும்..
இப்படி நிறைய பாயிண்ட் வைச்சு ஆள் எடுத்து வேலை செய்யுறாங்க.
இதனால் தான் மற்ற எல்லா ஐடி விங்க் வேலையும் பளிச்சென்று தெரியுது.
ஆனா திமுகல மட்டும்தான்.. மாவட்டம் சொன்னார்..ஒன்றியம் சொன்னார்.. வட்டம் சொன்னார்..உருண்டை சொன்னார்னு ரெக்கமன்டேசன்ல பதவி போடுறது.
அது போக யார் யார் அப்ளை பண்ராங்களோ அவங்களை சேர்த்துட்டு.  
அவங்ககிட்டயும் இன்னிக்கு மாவட்டம் அங்கே போறார்.. போஸ்ட் ரெடி பண்ணிக்கோ.
எம் எல் ஏ இங்க வரார்.. ரைட்டப் ரெடி பண்ணிக்கோ..
பாமாலை பாடு
பூமாலை போடு.
அண்ணனை பத்தி ஹெவியா பில்டப் பண்ணுன்னு சொல்லி ஆர்டர் போடுறது..


இது எழுத வேண்டாம்..அது எழுத வேண்டாம்.. அப்படி பண்ணாதே.. அதை டெலிட் பண்ணு.. இதை பண்ணுனு சொல்லிட்டு ஒழவோட்டல் வேறே .
இதுல எப்படி மற்ற கட்சி கூட போட்டி போட முடியும்?
எல்லாவற்றையும் விட கொடுமை என்னன்னா.. இவங்க ஐடி விங்க்ல வர்ற ஒரு பங்கு பூரா ஊட்டி இன்ப சுற்றுலா.. கொடைக்கானல் எக்ஸ்கர்சன் லெவல்ல போஸ்ட் போடும் ஆட்களா இருக்கு..
இதுல பாதி பேருக்கு ஊர்ல இப்படி ஒரு டிக்கெட் ஐடி விங்குல இருக்குனே தெரியாது.... லாக்ட் ப்ரொபைல்ல உக்காந்துட்டு மாசம் ஒருக்கா லாகின் பண்ற ஆட்களும் இருக்கு..
இது போக சிலர் நிஜமாவே வேலை செஞ்சாலும் அவங்களுக்கு ஏகப்பட்ட முட்டுக்கட்டை..
என்னன்னா.. புதுசா எங்கிருந்தோ எட்டு பேருக்கு கூட தெரியாத ஒரு பீசு வந்து நாட்டாமை பண்ணிட்டு இருக்கும்.
அந்த திடீர் நாட்டமைக்கு எதுக்குனே தெரியாம பயங்கர மரியாதை இருக்கும்..
ஐடி விங்க் ஆட்களை எல்லாம் மாவட்டம் உருண்டைகளை கேட்டு அவங்க சொல்ற ஆட்களை எடுத்தா திமுக ஐடி விங்க் எந்த ஜென்மத்துலயும் விளங்காது.  மாவட்டம் கட்டுப்பாட்டில் ஐடி விங்க் என்பது மாதிரி கூமுட்டை தனமாக ஒரு லாஜிக் இருக்கவே முடியாது.
இதுல மாவட்டம் போஸ்டுக்கு லைக் ஏன் வரலனு கமெண்ட் வரலனு கேள்வி வேறு வரும்.  
கட்சியை பண்ணலன்னா பரவால்ல.. மாவட்டத்தை ப்ரோமோட் பண்ணனுமாம்.. அதுக்காடா இருக்கு ஐடி விங்க்🤮🤮
இது எல்லாம் விளங்கி தள்ளிட்டாலும் .
பேசாம ஐடி விங்கை கலைச்சுட்டு அவனவனை ப்ரீயா விடுங்கயா . நந்தி மாதிரி குறுக்க நிக்கிற அப்ரன்டிஸ் ஆட்கள் இல்லன்னாவே
உண்மையா வேலை செய்யுறவனாவது நிம்மதியா இருப்பான்.


Bala Krish
ஐடி விங்ல உள்ளவங்க போஸ்ட் போட்டு ஒண்ணு கூட பார்த்தது இல்ல..யாரையாவது நாலு பேரை டேக் பன்னுங்க பார்ப்போம்..

Dhiwakaran Subbarayan
IT wing PTR kitta irunthapo paravala yaa irunthuchu naa 🙁

Stanley JD
சித்து... சமீபத்தில் ராமேஸ்வரத்தில் நடந்த ஒரு ( BL2 ) கூட்டத்தில் இப்போது முகநூலில் மிக பிரபலமான பலரையும் பார்த்தேன்.
கட்டிபிடித்து போட்டோ எடுக்கவோ, சால்வை போட்டு சிம்பதி உருவாக்க விரும்பல... நமக்கு அது செட்டும் ஆகாது.
திருமங்கலம் பழைய ச.ம.உ. முத்துராமலிங்கம் அண்ணனை மட்டும் பார்த்து பேசினேன்.
ஆனால்.....
ஒன்றிய
அந்த சுய விளம்பர மோகம்தான் இங்கு சிலரோட முகம். அந்த முகமே தேவையில்லைங்கிறேன் நான்...

Sribalaji Perumal
"Ohh... கட்சிக்கே அட்வைஸா" அணி கோவை கிளையின் சார்பாக இதனை கண்டிக்கிறோம்.
Cc: உண்மை அண்ணா குழு

James Stanly
  · "Ohh... கட்சிக்கே அட்வைஸா" அணி நெல்லை கிளையின் சார்பாக இதனை கண்டிக்கிறோம்.
Cc: உண்மை அண்ணா குழு

Bhuvanai Kiru
Ptr முதலில் இதை தான் சொன்னார் ஆனால் அதை அவரால் செயல்படுத்த முடியவில்லை அவளோ நெருக்கடி

Sangeetha P
நான் ஐடிவிங்கள இருக்கன்னு தான் பேரு .வாட்ஸ்ப் உள்ள போகமாட்டேன் . நான் தனியா இங்க இயங்கிட்டு இருக்கேன்.எனக்கும் வாட்ஸ்ப்ல வரத போட சொல்லுவாங்க போடமாட்டேன்

த.செந்தில் குமார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவினரை எவ்வளவு தொந்தரவு செய்யனுமோ அப்படி தொந்தரவு செய்த நாய்கள் எல்லாம் திமுக கரை வேட்டி கட்டிட்டு புது காரில் உலா வருது எங்கள் ஊரில்.திமுக அபிமானிகள் முதல் உண்மையான தொண்டன் வரை ஜீரணிக்க முடியாமல் அமைதியாக இருக்கிறார்கள்.கலைஞர் என்ற தலைவனுக்காக திமுகவில் தொடர்கிறார்கள்

Aps Ashok Kumar
அதை ஏன் சொல்றீங்க என்னை உங்களுக்கு எத்தனை வருடம் தெரியும்... இங்கு இல்லை ...அனைத்து சமூக வலைதளத்திலும் பணியாற்றி இருக்கிறேன்... ஆனால் தஞ்சை மாவட்டத்தில் M.m. Abdulla சொன்னார். Govi Lenin சொன்னார் என்றும் ...இன்னும் பல பேரோட சிபாரிசில் எந்த பணியும் ஆற்றாதவர்களுக்கு பொறுப்பு கிடைத்து இருக்கிறது... ஆனால் அதை பற்றி நமக்கு கவலை இல்லை... இப்படியான பொறுப்புகள் நமக்கு கிடைக்க வேண்டும் , என்று நாம் பணியாற்றவும் இல்லை ...வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்... ஆனால் கிடைத்த வாய்ப்பு அவர் சரியாக பயன்படுத்த வேண்டும்...
அந்தப் பணியை அவர்கள் சரியாக செய்யாத பொழுது செத்தவன் வாயில் வெற்றிலையாக இருக்கும் பொழுது தான் கோபம் வருகிறது

ஹரிபிரகாஷ் அருண்
வட்டம் மாவட்டம் ஒன்றியம் வீட்டு கல்யாணம், சீர், காதுகு*த்து, கெடாவெ*ட்டு, பெயர் சூட்டும் விழா போன்ற அனைத்து விசேஷங்களுக்கும் சிறப்பாக புகைப்படம் மற்றும் 🔥 வீடியோக்கள் தரமான முறையில் எடுத்து தரப்படும்
இங்ஙனம்
திமுக தொழில்நுட்ப அணி

Sabeer Ali
அது உண்மைதான், சிஏஜி அறிக்கை வெளியானதும் DMK IT பிரிவு சங்கிகளை கதற விட்டு இருக்கனும், ஆனால் 🥱

Nagaraj
  ·
தினமும் புலம்பிடுத்தான் இருக்கேன். எவன் கேட்கிறான்

Ulaganathan Chithambara Thanu
நம்ம கட்சில தான் மாவட்டமே வாழ்கணு போஸ்டர் அடிச்சு அதை இங்க போட்டா பதவி வாங்கி குடுத்திடுறோமே

ஹரிபிரகாஷ் அருண்
அதிமுககாரங்க எல்லாம் ஒத்த பைசா கூட வாங்காம கட்சிக்காரங்களுக்கு உதவி செய்றாங்க கட்சி மேல உசுரா இருக்காங்க. ஆனா திமுகல எதுக்கெடுத்தாலும் காசுக்கு தான் முன்னுரிமை தராங்க அதும் இந்த இரண்டாம் கட்ட ஆளுக இருக்காங்களே அவங்கள மாதிரி ஒரு ஆளுகள எந்த கட்சிலயும் பாக்க முடியாது..
இங்க நம்மல மாதிரி எந்தவித பண எதிர்பார்ப்பும் இல்லாத ஆட்களால தான் எந்தவொரு விசியத்தையும் ட்ரெண்ட் பண்ண முடியுது.

கருத்துகள் இல்லை: