tamil.oneindia.com - Mathivanan Maran : டெல்லி: இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் புலிப்படை இயக்கத்தின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜார், கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தியாவில் ரா அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியான நாளிலேயே காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
1980களில் பஞ்சாப் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருந்தது.
பஞ்சா அன்று பற்றிய எரிய காரணம் சீக்கிய தீவிரவாதிகள்தான்.
இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் எனும் தனி சீக்கியர் நாடு உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த தீவிரவாத்களின் கொள்கை.
இதற்காக பிந்தரன்வாலே தலைமையில் ஆயுதப் போராட்டத்தை நடத்தினர் சீக்கியர் தீவிரவாதிகள்.
இந்திய ராணுவம், சீக்கியர்களின் தனிநாட்டு ஆயுத கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.
பஞ்சாப் பொற்கோவிலில் பிந்தரன்வாலே உள்ளிட்ட சீக்கியர் தீவிரவாதிகளை ஒட்டுமொத்தமாக ஆபரேஷன் ப்ளூஸ்டார் மூலமாக முடித்து வைத்தது நமது இந்திய ராணுவம். இந்த ஆபரேஷன் விளைவாகத்தான் தேசத்தின் பிரதமர் இந்திரா காந்தி, சீக்கியர் பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார். ஆனாலும் சீக்கியர்களின் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளில் இருந்தபடியே தூண்டிவிடப்பட்டு வருகிறது. பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு காலிஸ்தான் கோரிக்கையின் இருப்பை சீக்கிய தீவிரவாதிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் சீக்கியர்களின் பிரிவினைவாத குரல் தலைதூக்கியது. இதனை மத்திய அரசு ஒடுக்குவதில் மும்முரமாக இருந்து வருகிறது. கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் பதுங்கி இருக்கக் கூடிய 40 சீக்கிய பயங்கரவாதிகள் பட்டியலை அண்மையில் மத்திய அரசும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் நாட்டின் ரா அமைப்பின் புதிய தலைவராக ரவி சின்ஹா இன்று நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது. ஜூலை 1-ந் தேதி முதல் ரவி சின்ஹா, ரா அமைப்பின் தலைவராக பதவியேற்க உள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியான போதே, கனடாவில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் காலிஸ்தான் புலிப்படை இயக்கத்தின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது கனடா வாழ் சீக்கியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காரில் அமர்ந்த நிலையில் நிஜார் சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்தார். அந்த இடத்துக்கு வந்த காலிஸ்தான் தீவிரவாதிகள், காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களையும் இந்திய எதிர்ப்பு முழக்கங்களையும் எழுப்பினர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக