சனி, 24 ஜூன், 2023

குஷ்பு மருத்துவமனையில் அனுமதி!

மின்னம்பலம்  - Jegadeesh :; பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு இன்று(ஜூன் 23) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை குஷ்பு. 90 களில் உச்ச நடிகையாக வலம் வந்த குஷ்பு ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தார்.
சினிமாவிலும் ஆக்டிவாக இருக்கும் இவர், சின்னத்திரையிலும் பிரபலமாக உள்ளார்.
ஒரு பக்கம் அரசியலில் பிஸியாக இருக்கிறார். பாஜகவில் இணைந்த பிறகு தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கட்சி பணிகளில் தவறாமல் பங்கேற்று வருகிறார்.


இந்நிலையில், நடிகை குஷ்பு இன்று (ஜூன் 23) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

அவர் நலமுடன் வீடு திரும்புவதற்கு அரசியல் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்பு குஷ்பு அடினோவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்

கருத்துகள் இல்லை: