மாலை மலர் : திமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தற்காலிகமாக நீக்கப்பட்டு சமீபத்தில்தான் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்றைய திமுக கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து, சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சிவாஜி கிருண் மூர்த்தி மீது வழக்கு பதிந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக