வியாழன், 5 ஜனவரி, 2023

இன்று கனிமொழி MP பிறந்த நாள் விழா! தூத்துக்குடியில் சிறப்பு மருத்துவ முகாம்

 tutyonline.net : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.,யின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம், மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் சேர்வைகாரன்மடம் ஊராட்சி தங்கம்மாள்புரம் சமுதாயக் கூடத்தில் கனிமொழி எம்பியின் பிறந்த நாள் விழா, ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், சலவை இயந்திரம், சேலை வழங்கப்பட்டது. பின்னர் மத்திய ஒன்றிய கழகம் தூத்துக்குடி அற்புதம் மருத்துவனை சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.


மருத்துவர்கள் ஜேம்ஸ் சுந்தர்சிங், மதன், முத்துலட்சுமி, சீனிவாசன், அனிஷ், மற்றும் அற்புதம் மருத்துவமனையை சேர்ந்த செவிலியர்கள் பங்கு பெற்றனர்.
பின் கூட்டாம்புளி அன்பு இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவை தலைவர் பாலசுந்தரம், மாவட்ட பிரதிநிதி நாகராஜன், வெயில் ராஜ், ராஜ்குமார் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வின், ஒன்றிய துணை செயலாளர்கள், ஹரி பாலகிருஷ்ணன், ஜெயராஜ், சேர்வைகாரன் மடம் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெனிட்டா ஜெபஸ்டின், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சண்முக நாராயணன், ஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு செயலாளர் ராஜா ஸ்டாலின், ஒன்றிய ஆதி திராவிட அணி அமைப்பாளர் மணிகண்டன் மகளிர் அணி நிர்வாகிகள் வரலட்சுமி, ஜெயா மெர்லின், தவசுந்தரி, வேதசெல்வி, ஹேமா உட்பட பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை: