செவ்வாய், 3 ஜனவரி, 2023

தொங்கிய உறுப்புகள்.. காரில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட பெண்! தெரிந்தே செய்த கயவர்கள்! ஷாக் பின்னணி

tamil.oneindia.com  -  Shyamsundar :  டெல்லி: டெல்லியில் கார் ஏற்றி தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண்ணின் கொலை வழக்கில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் 20 வயது பெண் ஒருவரை கார் ஒன்று 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு தர தரவென இழுத்து சென்று கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டு அன்று அதிகாலை வேலை முடித்துவிட்டு 2 மணிக்கு திரும்பிய அஞ்சலி என்ற பெண்தான் டெல்லியில் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
டெல்லியில் நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. கஞ்சவாலா என்ற சாலையில் கடை வைத்து இருக்கும் தீபக் டாஹியா என்ற நபர்தான் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து இருக்கிறார். புத்தாண்டு தினத்தின் அதிகாலை என்பதை அவர் கடையில்தான் தூங்கி இருக்கிறார்.


20 கிமீ
அங்கே கடை வைத்திருக்கும் அவர் தூங்கிக்கொண்டு இருந்த போது வெளியே டமார் என்ற சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து வெளியே வந்து பார்த்தவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. வெளியே பலீனோ கார் ஒன்று முன் பக்கம் ஸ்கூட்டி ஒன்று இருந்தபடி தரதரவென்று தள்ளிக்கொண்டு சென்றுள்ளது. அந்த ஸ்கூட்டியில் பெண் ஒருவரும் இருந்துள்ளார். இந்த கார் அந்த பெண்ணை தரதரவென்று தள்ளிக்கொண்டு சாலையில் மிக வேகமாக சென்றுள்ளது. 4 கிமீ தூரம் உள்ள சாலையை அந்த கார் 3 முறை ரவுண்ட் அடித்துள்ளது. இங்கும் அங்கும் யூ டர்ன் போட்டு காரை வேகமாக ஓட்டி உள்ளனர். இதில் அந்த பெண்ணின் உடல் உறுப்புகள் வெளியே வந்து மிக கோரமாக மரணம் அடைந்துள்ளார்.

என்ன சொன்னார்கள்?
தீபக் கண்ணா (26), அமித் கண்ணா (25), கிருஷ்ணன் (27), மிதுன் (26), மனோஜ் மிட்டல் (27) ஆகியோர்தான் காரில் இருந்துள்ளனர். இவர்கள் எல்லோரும் மோசமாக குடித்து இருந்தனர். தீபக் கண்ணாதான் வண்டியை ஊட்டி இருக்கிறார். முதலில் போலீஸ் விசாரணையில் இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், எங்களுக்கு எதுவுமே தெரியாது, நாங்கள் விபத்தை ஏற்படுத்தவில்லை. நாங்கள் காரில் சென்று கொண்டு இருந்தோம். உள்ளே பாட்டு போட்டுகொண்டு போய்க்கொண்டு இருந்தோம். அதனால் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. எங்களை போலீஸ் கைது செய்த போதுதான் இந்த சம்பவமே எங்களுக்கு தெரிந்தது என்று கூறியுள்ளனர்.

உண்மை என்ன?
ஆனால் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், நாங்கள்தான் விபத்தை ஏற்படுத்தினோம். காரை வைத்து அந்த பெண்ணை மோதிவிட்டோம். பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் வேகமாக காரை ஓட்டி அங்கிருந்து சென்றுவிட்டோம். ஆனால் கடைசியில் காரை நிறுத்தும் போதுதான் அவரின் உடலை பார்த்தோம். காருக்கு அடியில் உடல் சிக்கி, சிதைந்து இருந்தது. உடலை அங்கேயே போட்டுவிட்டோம், என்று கூறியுள்ளனர். ஆனாலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து ஓடியவர்கள் ஏன் மீண்டும் மீண்டும் ஒரே ஏரியாவில் 3 முறை ரவுண்டு அடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தெரிந்து செய்தனர்?
அப்படி என்றால் கார் அடியில் உடல் சிக்கி இருப்பது தெரிந்தேதான் இவர்கள் இங்கும் அங்கும் வண்டியை வைத்து ரவுண்டு அடித்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் குடி போதையில் இருந்ததாக போலீசிடம் தெரிவித்து உள்ளனர். லோகேஷ் என்ற நபரிடம் அஸ்தோஷ் என்ற நபர் காரை கடன் வாங்கி தீபக் கன்னாவிடம் கொடுத்துள்ளார். அவர்தான் காரை பெண் மீது விட்டு விபத்து ஏற்படுத்தி உள்ளார். போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் புத்தாண்டு அன்று காலை 4.40 ,அணிக்கு போலீசார் சுல்தான்புரி பகுதியில் அந்த பெண்ணின் உடலை மீட்டனர்.

கொலை
இந்த சம்பவம் டெல்லியை உலுக்கி உள்ளது. கார் நம்பரை வைத்து, அந்த காரில் பயணம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் அஞ்சலி. இவர் அமர் விஹார் பகுதியில் வசித்து வருகிறார். 20 வயதாகும் இவருக்கு 4 தங்கைகள், 2 தம்பிகள் உள்ளனர். இந்த பெண்ணை அந்த 5 ஆண்களும் வன்புணர்வு செய்து கொலை செய்து இருக்கலாம் என்று பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

A Delhi girl was dragged for 20 km for hours and killed, The accused confessed to the crime in FIR.
 

கருத்துகள் இல்லை: