Surya Xavier : இராமர் பாலம்- நிலவியல் ஆய்வுகளும், பாஜகவின் கார்ப்ரேட் அரசியலும் என்ற தலைப்பில் ஜனவரி மாத உயிர்மை இதழில் கட்டுரை எழுதியுள்ளேன். அட்டைப்படத் தலைப்புக் கட்டுரை அதுதான் என்றார் உயிர்மை ஆசிரியர் கவிஞர்.மனுஸ்யபுத்ரன்.
காவிரி நீரோவியம் புத்தகத்தின் 73 வது அத்தியாயம் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம்- கோடியக்கரை நிலவியல் ஆய்வுகள் என்பது தான்.
இந்திய நிலப்பகுதியோடு இணைந்து இலங்கை நிலப்பகுதி இருந்தது. கி.மு.3 ல் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் தான் இருபகுதியானது. எனவே தான் இந்திய வரைபடத்தைக் காட்டும் போது இலங்கையையும் இணைத்துக் காட்டுவார்கள்.
தற்போதைய செயற்கை கோள் ஆய்வுகளின்படி வேதாரண்யம்- யாழ்ப்பாணம் நிலப்பகுதி தரை வழிப்பயணத்திற்கு ஏற்றவாறு கடலிலிருந்து விரைவில் மேலெழும்.
ஒன்றாக இருந்த நிலப்பகுதியை நினைவு படுத்தும் விதமாக வேதாரண்யத்தில் பல தெருக்களுக்கு யாழ்ப்பாண வீதி என்றே பெயர்.
படத்தில் உள்ளது யாழ்ப்பாண வீதி தான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாண வீதியை "புதுத்தெரு" என்று மாற்றியுள்ளார்கள்.
பண்டைய சேரியான பாண்டிச்சேரியின் வரலாற்றை அழித்து புதுச்சேரி என்றதைப் போல.
இந்த பெயர் மாற்றத்தின் பின்னணி அரசியல் யாதெனில்
சனாதன இந்துக்களுக்கும்,
சாமானிய இந்துக்களுக்குமான கருத்தியல் மோதல்களே.
சாமானிய இந்துக்களின் நீண்ட நெடிய வரலாறை அழிப்பது தான்
சனாதன இந்துக்களின் அரசியல்.
யாழ்ப்பாண வீதி என்றும்
பாண்டிச்சேரி என்றுமே அழைக்கப்பட வேண்டும்.
வேதாரண்யத்தில் யாழ்ப்பாண வீதி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக