திங்கள், 2 ஜனவரி, 2023

கோவை ஜக்கி வாசுதேவ் இன் ஈஷா யோகாஈஷாவில் இது முதல் முறையல்ல” - இளம்பெண் மரணம் குறித்து ஜோதிமணி எம்.பி

 நக்கீரன் : கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காகச் சென்ற தனது மனைவி சுபஸ்ரீயைக் காணவில்லை என திருப்பூரைச் சேர்ந்த அவரது கணவர் பழனிகுமார் போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போன சுபஸ்ரீ, கோவை செம்மேடு பகுதியில் விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது கையில் இருந்த ஈஷா யோகா மையத்தின் மோதிரத்தை வைத்து மீட்கப்பட்ட உடல் சுபஸ்ரீ தான் என்று அவரது கணவர் பழனிகுமார் உறுதி செய்தார். அதன் பின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவை ஈஷா யோகா மையத்திற்குப் பயிற்சிக்காக வந்த பெண் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இம்மாதிரி சம்பவம் நடப்பது முதல் முறையல்ல. பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல" எனக் குறிப்பிட்டுள்ளார். 

Flash Back 

கருத்துகள் இல்லை: