தினத்தந்தி : சென்னை, சென்னை ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 60 வயதுமிக்க கண்ணையா என்ற நபர் ஒருவர் அவரது வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது இடிக்கப்படுவதை கண்டித்து தீடிரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே சம்பவ இடத்தில் இருந்த போலீசார் கண்ணையாவை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கண்ணையா தீக்குளித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இளைஞர்கள் அங்கிருந்த அரசு வாகனங்கள், புல்டோசரின் மீது கற்களை எரிந்து அடித்து உடைத்தனர்.
கோவிந்தசாமி நகரில் குடியிருப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முதியவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chozha Rajan : முதல்வருக்கே தெரியாமல் இந்த மாபெரும் இடிப்பு நிகழ்ச்சி நடந்தது என்று சொன்னால் இந்த ஆட்சிக்கு அது மிகப்பெரிய அவமானம்...
ஆக்கிரமிப்பாக இருந்தாலும், ஏழைகளுக்கான அரசா? தொழில் அதிபருக்கான அரசா என்ற கேள்வி உறுத்திக்கொண்டே இருக்கிறது...
அவர்கள் அந்த இடத்தில் வீடு கட்டியதற்கு அரசு அதிகாரிகளும், மாநகராட்சி நிர்வாகமும் உடந்தையா இல்லையா?
இவர்களே உடந்தையாக இருந்துவிட்டு, பார்த்துப்பார்த்து கட்டிய வீட்டை இடிப்பது கொடுமை இல்லையா?
இதற்கு காரணமான அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டாமா?
Chozha Rajan
Chozha Rajan
சுந்தரம் மகாலிங்கம் திமுகவினரை சந்திக்கவே நேரமில்லாத உழைப்பாளி ஸ்டாலின் வாழ்க... சபரீஸன் பெயரிலும், உதயநிதி பெயரிலும் மட்டும் தமிழ்நாடு முழுவதும் கமிஷன பெறும் திமுக பொறுப்பாளர்கள் வாழ்க... தங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் என்று பத்து ஆண்டுகளாக காத்திருந்த அடிப்படைத் தொண்டனுக்கு அரசின் சிறு உதவிகூட கிடைக்காமல் பணம் எதிர்பார்க்கும் போக்கு தொடர்க... என்றும் கூவலாம்...
Chozha Rajan
சுந்தரம் மகாலிங்கம் நடந்திருப்பது எவ்வளவு பெரிய துயரம்.. இந்தப் பதிவில் வந்து என்ன கருத்து போடுகிறீர்கள் என்பதிலிருந்தே உங்களைப்பற்றி அறிய முடிகிறது... நான் நல்ல எண்ணத்தில்தான் பதிவிடுகிறேன். உங்கள் பார்வையில் கோளாறு இருந்தால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது...
ராஜ இராசன்
கட்சி காரனை சந்தித்து பேச நேரமில்லை
சந்நியாசிகளை பார்த்து பேச நேரம் எங்கே இருந்து வருது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக