BBC Tamil : இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்து பேசி வருகிறார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்கு அமைதியற்ற சூழல் தொடர்கிறது. பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியுள்ளார். தொடர் வன்முறை சம்பவங்களில் 9 பேர் வரை இறந்துள்ளனர்.
நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தலைநகர் கொழும்புவில் ராணுவ கவச வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசி வருகிறார்.
இதைத் தொடர்ந்து இன்று இரவு 9 மணிக்கு மக்களுக்கு விஷேட உரையாற்ற திட்டமிட்டுள்ளார்
புதன், 11 மே, 2022
ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக்சே திடீர் சந்திப்பு .. இலங்கை நெருக்கடி நிலையில் திருப்பம்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக