ஞாயிறு, 8 மே, 2022

மோடி அரசால் நிறைவேறாமல் போன ஒரு ஊழல் முயற்சி.. லட்சுமி மிதத்தல் கம்பனியோடு சேர்ந்து போட்ட திட்டம்

 ராதா மனோகர் : பிரதமர் மோடியின் நிறைவேறாமல் போன ஒரு பெரிய ஊழல் கதை ஒன்றுள்ளது.
இது பற்றி இந்திய ஊடகங்கள் வழமை போல கனத்த மௌனத்தை கடைப்பிடித்தன  .. இன்றுவரை ஒரே மௌனம்தான்
இந்த ஊழலை முறியடித்ததில் பெரும் பங்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரனையே சாரும்( இப்படி சொன்னால் அவருக்கு புகழ் போய்விடும் என்று கிளப்பி ஹவுசில் சிலர் வகுப்பு எடுக்கிறார்கள் .. அது வேற கதை இருக்கட்டும்)
 சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு   ஐம்பதாயிரம் வீடுகள் கட்டி கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் .
பின்பு அதை அறுபத்து  அய்யாயிரமாக உயர்த்தினார்



 அங்கு  மன்மோகன் சிங் அரசு ஏற்கனவே ஐம்பத்தாயிரம் கான்க்ரீட் வீடுகளை கட்டி கொடுத்தது ..
ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் ஐந்து  லட்சம் ருபாயிருந்து   (இந்திய ரூபாய்) ஏழு  லட்சம் வரை செலவானது. .

ஆனால் மோடி அறிவித்த வீட்டு திட்டமோ வெறும் (தகர பொருத்து)  டின் வீடு சுமார் ஒரு லட்சம்  (இந்திய ரூபாய்)  ரூபாய் மட்டுமே பெறுமதியானது .
ஆனால் இந்திய அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் ஆகும் செலவை 22  லட்சம் (இந்திய ரூபாய்) என்று அறிவித்தது.
(22 லட்சம் X அறுபத்தி அய்யாயிரம்ர் வீடுகள் .. .. கணக்கு பார்த்து கொள்ளுங்கள்.)
இந்த பொருத்து  வீட்டு திட்டத்தின் கான்டராட்க் லட்சுமி மித்தலின்  ஆர்சிலர் மித்தல் கம்பனிக்கே வழங்கப்பட்டது 


அங்கு எதிர்க்கட்சி உறுப்பினர் சுமந்திரன் அதில் உள்ள ஊழலை அக்குவேறு ஆணிவேராக  பிட்டு பிட்டு வைத்து கடுமையாக எதிர்த்தார்
அதனால் அது கைவிடப்பட்டது.
மோடியரசின் மோடி வித்தைக்கு அவர்கள் ஒத்து ஊதாமல் விட்டதால் அதன் பின் பெரிதாக வீடு திட்ட முயற்சிகள் முன்னெடுக்கவில்லை.

இதில் இருந்து தெரியவரும் உண்மைதான் பெரும் அதிர்ச்சிக்கு உரியதாகும்.
மோடியரசு பிற நாடுகளுக்கு கொடுக்கும் உதவிகள் என்பது உள்ளூர் கொள்ளையர்களின் இன்னொரு மோசடி வித்தையாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த கோணத்தில்தான்  மோடி அரசின் பன்னாட்டு உதவிகள் பற்றி  நோக்கவேண்டும்.
ஆனால் இவற்றை கண்காணிக்க கூடிய அமைப்புக்கள இந்தியாவில் இல்லை.
வெளிநாட்டு தூதரகங்களிலும் வெளியுறவு அமைச்சகத்திலும் உள்ள ஜெய்சங்கர் நிம்மி வகை பார்பனர்கள் தங்கள் பங்கையும் சேர்த்து வாங்குவார்கள்

கருத்துகள் இல்லை: