சனி, 14 மே, 2022

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெளிநாட்டு தூதர்கள் சந்தித்து புதிய அரசுக்கான ஆதரவை தெரிவித்தனர்

 மின்னம்பலம் : இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியான நிலையில் பிரதமர் பதவியை ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கே நேற்று (மே13) இந்தியா உள்ளிட்ட முக்கிய வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதர்களை சந்தித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகளின் இலங்கைக்கான தூதர்களை ரணில் விக்கிரமசிங்கே சந்தித்தார்.
இது குறித்து கொழும்பில் இருக்கும் இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்த உயர் ஸ்தானிகர் நல்வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்திருந்தார். அத்துடன் இலங்கையின் சகல மக்களினதும் நல்வாழ்வை நோக்கிய ஜனநாயக செயற்பாடுகள் ஊடாக இலங்கையில் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இந்தியா மற்றும் இலங்கை இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



இதற்கிடையே இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு குழு ஒன்றை அமைத்துள்ளார் ரணில் விக்ரமசிங்கே.

இலங்கை அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் நீண்ட அனுபவம் பெற்ற ரனில் விக்ரமசிங்கே தற்போதைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியை நாட இருக்கிறார்.

இது தொடர்பாக ரணில் விரைவில் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேந்தன்

கருத்துகள் இல்லை: