Radha Manohar : பேரறிவாளன் விடுதலையை அளவுக்கு மீறி
கொண்டாடி
போலி உணர்ச்சி பெருவெள்ளம் புராஜெக்ட் பண்ணுவோர்கள்
எல்லோரும் உள்ளுக்குள்ளே கடும் குற்ற உணர்ச்சியால் உழல்பவர்கள்தான்
இலங்கை தமிழர்களின் போராட்ட ஆரம்ப காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து உதவியவர்கள் பலரும் உண்மையிலே உணர்வாளர்கள்தான்
தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் இதனால் ஏராளமாக இழந்திருக்கிறார்கள் .. அவர்களின் பல கதைகள் இன்றுவரை பேசப்படவில்லை
ஆனால் ஈழப்போராட்டத்தின் போக்கிலே ஒரு திருப்பம் அல்லது ஒரு விபத்து ஏற்பட்டிருக்கிறது
விடுதலை போராட்டம் என்பது தனது தகுதியை ஒரே நாளில் இழந்தது
ஒரே நாளில் இது வெறும் பயங்கரவாதமாக வெடித்தது என்பதுதான் வரலாறு
அந்த தேதியில் இருந்து பலரும் ஒதுங்கி விட்டார்கள் கலைஞர் உட்பட.
அதன் பின்பு தொடர் பயங்கரவாத நடவடிக்கைகள் அசல் மாபியா பாணியில் விரிவடைந்தது
பல தமிழக தலைவர்கள் அவர்களின் பணத்தில் அல்லது புகழ் வெளிச்சத்தில் அல்லது ஏதோவொரு தவறான மயக்கத்தில் தங்களை அந்த மாபியா கூட்டத்தில் கரைத்து கொண்டனர்
அவர்களை ...
அவர்களே தோற்கடித்து கொள்வார்கள் என்ற ஐன்ஸ்ட்டின் விதியை பற்றி புரிதல் இல்லாமல் போய்விட்டது
அல்லது சுயநலம் கண்ணை மறைத்து விட்டது
அந்த மாபியாக்களின் அத்தனை குற்ற செயல்களிலும் தமிழ்நாட்டில் இருந்த பலரும் பங்காளியாக இருந்திருக்கிறார்கள்
கல்லூரி அதிபர்களை கொன்றால் என்ன
கற்றறிந்த அமைச்சர்களை கொன்றால் என்ன
கேள்வி கேட்டார்கள் என்ற காரணத்திற்காக வகை தொகை இன்றி கொன்றொழித்தால் என்ன..
அவற்றை எல்லாம் வீரப்போர் என்று நெடுமாக்களும் காவி ஆனந்தன்களும் வைக்கோக்களும் திருமாக்களும் மட்டுமல்ல பல பெரியார் மற்றும் இடதுசாரி தோழர்களும் தமிழ்நாட்டில் பரணி பாடி ஆனந்த கூத்தாடினார்கள்.
இவர்களுக்குக்குதான் எந்த நஷ்டமும் இல்லையே ?
இவர்களின் உணர்ச்சி பேச்சுக்களால் கொம்பு சீவி விடப்பட்ட முத்துக்குமார்களும் செங்கொடிகளும் இன்னும் கணக்கிலடங்காத இளைய தலைமுறையினரின் வாழ்க்கையைதான் பந்தாடி விட்டாயிற்றே?
குற்ற உணர்ச்சி கொஞ்சமாவது இருக்குமா? இருக்காதா?
அன்று இளைஞராக இருந்த பேரறிவாளன் கூட இந்த கொம்பு சீவிகளால் உசுப்பேற்ற பட்டு வாழ்க்கையை தொலைத்தவராகவே இருக்கவும் கூடும்?
பயங்கரவாதிகளின் பச்சை படுகொலைகளை நியாயப்படுத்தி குளிர்காய்ந்த கூட்டம்,
இன்று பேரறிவாளனை பாரத ரத்னா ரேஞ்சுக்கு கொண்டாடி புளகாங்கிதம் அடைகிறார்கள்
உங்கள் மேடைகளில் ஏற்றி வாழ்த்து பாடுங்க
கூடவே நோபல் பரிசையும் வாங்கி கொடுங்க நல்லா இருப்பீங்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக