வெள்ளி, 20 மே, 2022

அன்னை சோனியாவுக்கே அற்புதம்மாள் முதலில் நன்றி தெரிவித்திருக்க வேண்டும்

May be an image of 1 person

Elengovan K Dev  :  நன்றி தியாகதலைவி அன்னை சோனியாவே!!!
அற்புதம்மாள் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் அவர் முதலில் நன்றி தெரிவித்திருக்க வேண்டியது அன்னை சோனியா குடும்பத்திற்கே.
காலதாமதமான  கருணைமனு பரிசீலனையே அவர்களின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக காரணம்
சோனியா நினைத்திருந்தால் கருணைமனுவை விரைவில் நிராகரிக்க வற்புறுத்தியிருக்கலாம் .
சோனியா நினைத்திருந்தால் பாஜக அரசுபோல அப்துல்கலாம் இறந்த அன்று  கருணைமனுவை நிராகரித்து நள்ளிரவுவரை உச்சநீதிமன்றத்தை திறந்துவைத்து மேல்முறையீட்டை தள்ளுபடிசெய்து நள்ளிரவே அப்சல்குருவை தூக்கிலிட்டதுபோல் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்கலாம்..


தன்மகள் பிரியங்காவை நளினியை சந்திக்க அனுப்பியதாக இருக்கட்டும்...
அவரின் மரணதண்டனையை கலைஞர் ஆயுள் தண்டனையாக குறைக்க அனுமதித்தாக இருக்கட்டும்  மேலும் 6ருக்கு ஆயுள்தண்டனையாக குறைத்ததற்கு சட்ட போராட்டம் நடத்தாமல் அனுமதித்ததாக இருக்கட்டும்
என் தந்தை கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் என்று கூறியதாக இருக்கட்டும் இறுதிகட்டபோரில்  பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதை கண்டு கண்கலங்கியதாக கூறிய ராகுலாக இருக்கட்டும்
தியாக குடும்பத்தின் பெருந்தன்மையே ...
இதையெல்லாம் பொதுமக்களிடம் சொல்லவேண்டிய தமிழக காங்கிரஸ் வாயில் துணியை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி தனித்து நிற்கிறது சங்கிகளோடு...

கருத்துகள் இல்லை: