சனி, 18 டிசம்பர், 2021

திருப்பூரில் நடுரோட்டில் தீக்குளித்த பெண்.. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

 கலைஞர் செய்திகள் : திருப்பூரில், நடுரோட்டில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் தெய்வானை. இவரது கணவர் கோபால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து தெய்வானை திருப்பூர் பகுதியில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது, உடன் பணியாற்றிய ஒருவருடன் தெய்வானைக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த நபரிடம் தெய்வானை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு அந்த நபர் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகக் கூறியுள்ளார்.


இதனால் ஆவேசமடைந்த தெய்வானை மகளிர் காவல்நிலையத்தில் அந்த நபர் மீது புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலிஸார் இருவரையும் காவல்நிலையம் வரவழைத்து சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தெய்வானை நடுரோட்டில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக் கொண்டார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவர் தீக்குளிக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர். பெண் ஒருவர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: