ஞாயிறு, 12 டிசம்பர், 2021

இலங்கையில் உலகில் மிகப் பெரிய நீலக்கல் 310 கிலோ - பிடிக்கப்பட்டுள்ளது

 வீரகேசரி : இரத்தினபுரி – பட்டுகெதர பிரதேசத்திலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த நீலக்கல்லின் எடை 310 கிலோ கிராம் ஆகும்.
இதற்கு ‘ஆசியாவின் ராணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையினால் இந்த நீலக்கல்லிலிருந்து ஐந்து மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு, அவை இரத்தினபுரியிலுள்ள இரத்தினவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.
முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த நீலக்கல் உலகிலேயே மிகப் பெரிய நீலக்கல் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை அறிவித்துள்ளது.


அத்தோடு இது மிகவும் அரியவகை நீலக்கல் என்பதோடு , உலகில் எந்தவொரு பகுதியிலும் இதுவரையில் இவ்வாறானதொரு நீலக்கல் கண்டு பிடிக்கப்படவில்லை என்று அதனை ஆய்விற்கு உட்படுத்திய இரத்தினவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: