புதன், 26 மே, 2021

வட இலங்கைக்கும் கேரளாவுக்கும் இடை உள்ள வரலாற்று தொடர்பு - பேராசிரியர் சிவலிங்கராஜா (யாழ் பல்கலை கழகம்) பேட்டி

 

செல்லபுரம் வள்ளியம்மை  : யாழ்ப்பாணத்தில் பூர்வீக தமிழர்கள் மட்டும்மல்லாது கேரளம் ஆந்திரம் கன்னடம் போன்ற பிற தென்னிந்திய மாநிலங்களில் இருந்தும் வந்து குடியேறிவர்களும் இருக்கிறார்கள் இது ஒன்றும் தவறான விடயம் அல்ல
காலத்திற்கு காலம் அண்டைய தேசங்களில் உள்ள மக்கள் அங்கும் இங்கும் குடிபெயர்வது சாதாரண நிகழ்வுகள்தான்.
சுமார் அறுபதுகள் வரைக்கும் தென்னிந்தியர்கள் யாழ்ப்பாணம் மட்டுமல்லாது மன்னார் சிலாபம் புத்தளம் நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் குடியேறி உள்ளனர் மட்டக்களப்பில் கூட பல இந்திய வம்சாவளியினர் குடிபெயர்ந்துள்ளனர்
இவை ஒரு புதிய செய்தி அல்ல . எல்லோருக்கும் தெரிந்ததுதான்
குடிவரவு சட்டங்கள் கெடுபிடியாக இல்லாத அந்த காலங்களில் அப்படி வருபவர்கள் உள்ளூர் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் அரிசி கூப்பன் (ரேஷன் அட்டையை பெற்றதும் அவர்கள் அடுத்த கட்டமாக வாக்குரிமையையும் பெற்று விடுவார்கள்
ஆனால் இந்த குடியேற்ற வாசிகள் கூடுமானவரை தங்களின் தென்னிந்திய அடையாளங்களை மறைத்து உள்ளூர் மக்களோடு கலந்து விடுவார்கள்
ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் அவர்களை போலீசார் பிடித்து தொந்தரவு செய்ய கூடிய ஒரு நிலையே இருந்தது. 

இந்த சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும்தான்
 ஸ்ரீமாவோ அம்மையார் அடையாள அட்டை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்


மேலும் தொழில் சார்ந்த சமூகங்கள் பெரும்பாலும் ஒரு நூற்றாண்டுக்கு
உட்பட்ட தென்னிந்திய வரவுதான்
குறிப்பாக யாழ்ப்பாண உணவகங்கள் பெரிதும் மலையாளிகளின் கைவண்ணம்தான்
யாழ்நகரின் உணவகங்கள் மலையாளிகளின் கைவண்ணத்தில் இருந்தது போலவே இரும்பு தொழில்கள் போன்றவை நாடார் வசமிருந்தன
அவர்கள் மட்டுமல்ல நகரின் மைய பகுதிகளில் ஏராளமான தெலுங்கர்களும் இருந்தார்கள் இவர்கள் எல்லோரும் தற்போது தமிழர்கள்தான் ஈழ போராட்டங்களில் ஈடுபட்டு எல்லாவற்றையும் இழந்தவர்களும் இதில் உண்டு
வரலாற்றை அறிதல் என்ற நோக்கத்திற்காக மட்டுமே இந்த ஆய்வுகள் நடத்தப்பட்ட வேண்டும்
அநேகமாக தமிழ் பகுதிகளின் ஒவ்வொரு ஊர் மக்களும் ஏதோவொரு தென்னிந்திய பாரம்பரியத்தை கொண்டிருப்வர்கள் என்றே கருதுகிறேன்
அதனால்தானோ என்னவோ ஒரு ஊர் மக்கள் எப்போதும் இன்னொரு ஊர் மக்களோடு ஒரு மென்மையான பகை உணர்வோடு இருக்கிறார்கள்
இரு யாழ்ப்பாணத்தவர்கள் எங்காவது சந்தித்தால் நீங்கள் எந்த ஊர் என்று கேட்காமல் பேச தொடங்கவே மாட்டார்கள்
அது சாதாரண கேள்வியா அல்லது அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் ஊறி இருக்கும் வரலாறு ரீதியான தேடலோ தெரியாது

கருத்துகள் இல்லை: