Radhakrishnan KS . : அன்பு நண்பரும், எம்ஜிஆர் அவர்களின் பேரனுமான டாக்டர் குமார் ராஜேந்திரன் இன்று எனக்கு அனுப்பியது இந்தப் புகைப்படம். எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் தன்னைக் காண வருபவர்களைச் சந்திக்கும் வரவேற்பரையில் வைக்கப்பட்டிருந்தது தலைவர் கலைஞர் புகைப்படம். குமார் ராஜேந்திரன்
மேலும் குமார் ராஜேந்திரன் கூறியது, எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து விலக்கப்பட்டு அண்ணா திமுகவைத் துவக்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த
போதும், எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்தில் இருந்த வரவேற்பறையில் கலைஞருடைய புகைப்படத்தை எடுக்காமல்வைத்திருந்ததுநெழ்ச்சியைத் தருகின்றது.
எம்ஜிஆருக்கும் கலைஞருகும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், நட்பு ரீதியில் அன்பும், பாசமும் இருவருக்கும் இடையே அதிகமாகவே இருந்தது.
திருச்செந்தூர் நோக்கி (கோவிலில் முருகன் வேல் களவு போனபோது) மதுரையிலிருந்து நீதி கேட்டு நெடிய பயணம் எம்ஜிஆர் ஆட்சி கண்டித்து சென்ற போது கூட முதல்வர் எம்ஜிஆர் தலைவர் கலைஞரிடம் உடல் நிலை அக்கறையோடு பார்த்து சென்று வாங்க என்றார். அதனால்தான் எம்ஜிஆர் மறைந்த செய்தியைக் கேட்டதும் ஈரோட்டில் மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கலைஞர், ஏற்காடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்பி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேராக ராமாபுரம் தோட்டத்திற்குச் சென்று அந்த விடியல் பொழுதில் முதன்முதலாக எம் ஜி்ஆர் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் என்பதெல்லாம்
செய்திகள் .
சட்டசபையில் ஒருவிவாதத்தின் போது கலைஞருக்கு பதில் கொடுத்தார் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த வி.பி.பாலசுப்பிரமணியம்( வேடசந்தூர் தொகுதி- பின்னாளில் துணை சபாநாயகர்) அவரது ஆணித்தரமான பதில் கலைஞரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனை பாராட்டிய எம்.ஜி.ஆர். ஒரு விடயத்துக்காக சொந்த கட்சி எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியத்திடம் லேசாக கடிந்து கொண்டார். என்னதான் இருந்தாலும் எனக்கு தலைவராக இருந்தவர். அவரை வார்த்தைக்கு வார்த்தை கருணாநிதி என்று சொல்லக் கூடாது என்றாராம். இப்படி ஒரு தகவலை அடிக்கடி என் தந்தையார் சொல்வார். அந்த அளவுக்கு கலைஞர் மீது பற்றும் பாசமும் வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஆர்.ராதா, இந்த அறையில்தான் துப்பாக்கியால் எம்ஜிஆரை 1967ல் சுட்டார்.
எமஜிஆர் மறைவு அன்று, அண்ணா சாலையில் இருந்த கலைஞருடைய சிலையை சிலர் உடைக்க அதற்காக ஜானகி அம்மையார் வருத்தப்பட்டதும் உண்மை. கலைஞர் அவர்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு தனது
கருத்தை கூறினார்.
திரு.குமார் ராஜேந்திரன் இந்தப் படத்தை எனக்கு அனுப்பியவுடன் இந்தத் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. இது கடந்த கால செய்திகள் மட்டுமல்ல, இன்றைய அரசியல் சூழலில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டியதும் ஒன்று.
கழகத் தலைவர்/ முதல்வர் திரு.எம்கேஎஸ்அவர்களும் பாராட்டப்
படக் கூடிய ஒரு நல்ல நாகரிகம் அரசியல் நட்பின் அத்தியாயம் மறுபடியும் துவங்கியுள்ள நிலையில், நட்புக்கு வலுசேர்க்கும் விதமான இந்தப் புகைப்படம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக