மின்னம்பலம் :
கங்கையை
சுத்தப்படுத்தும் நோக்கில், மத்திய அரசினால் தொடங்கப்பட்ட ‘நமமி கங்கா’
திட்டத்தை பார்வையிடச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,
படிக்கட்டுகளில் ஏறும்போது திடீரென கால் இடறி கீழே விழுந்தார்.
தேசிய கங்கை ஆணையம் அமைக்கப்பட்டு கங்கை நதியை சுத்தப்படுத்துவது, பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது மத்திய அரசு. இதற்கு கங்கா நமமி புராஜெக்ட் என்று பெயரிட்டு, இதன் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று(14.12.19) கான்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள கான்பூர் வந்த மோடி, சந்திரசேகர் ஆசாத் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு வந்தடைந்தார். அங்கு படிக்கட்டுகளில் ஏறியபோது, ஒரு பகுதி படிகளில் கடைசி படிக்கட்டில் கால் வைத்தபோது, அதில் கால் இடறி கீழே விழுந்தார்.
மோடி விழுந்ததைப் பார்த்ததும் பதறிப்போய் ஓடிவந்த அவரது பாதுகாவலர்கள் மோடியை கைகொடுத்து தூக்கி நிறுத்தினர். ‘எதுவும் ஆகவில்லை’ என கையசைவுகளாலேயே கூறிய மோடி தொடர்ந்து நடந்து சென்றார். கங்கை நதி பாயும் மாநிலங்களான உத்திரப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் பிகார் ஆகியவற்றைச் சேர்ந்த முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஆனால், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை.
இந்திய குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பு அஸ்ஸாமிலிருந்து வட கிழக்கு மாநிலங்கள் வரை பரவி, இப்போது மேற்கு வங்காளத்தில் போராட்ட நிலையை அடைந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக